சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் ஆகியோருடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தில் நடித்தவர் சேதுராமன்.
இவரது தொழில் மருத்துவம். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர் ஆவார்.
இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இப்போது 35 வயதாகிறது.
கடந்த 2016 பிப்ரவரியில் காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் உமையாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
இந்த நிலையில் இன்று சற்றுமுன் இவர் மாரடைப்பால் காலமானார்.
இவரின் இல்லம் சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் அருகில் சிப்ரோஸ் அபார்ட்மெண்டில் உள்ளது.
இதே அபார்ட்மெண்டில் தான் நடிகர் சதீஷ் வசித்து வருகிறார். இவரின் மறைவை சதீஷ் உறுதி செய்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Actor Dr Sethuraman aka Sedhu passed away