அபிநயா ஸ்ரீ, அனுமோல், “அருவி” மதன், லிங்கா, சிங்கம்புலி, TSR ஸ்ரீனிவாசன், லவ்லின் சந்திரசேகர் மற்றும் பலர் நடிப்பில், மதன் குமார் தாக்ஷிணா மூர்த்தி இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இனைய தொடர்தான் “அயலி”.
கதைப்படி,
14ஆம் நூற்றாண்டில் ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடுகிறது. அதன் பின், ஊர் ஏரியில் இருக்கும் மீன்கள், ஆடு, மாடு என அணைத்து உயிரினமும் இறந்து போகிறது. மேலும், வயலெங்கும் தீ பற்றி எரிய, மக்கள் யாரும் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு காரணம், அந்த ஊர் குலதெய்வம் காதல் ஜோடி ஓடியதனால் உக்கிரமைடைந்து அதிருப்தியில் இருப்பதால் தான் என்று ஊர் மக்கள் நம்புகின்றனர். அந்த குலா தெய்வத்தின் பெயர் தான் “அயலி”.
இதனை தொடர்ந்து, ஊர் மக்கள் அனைவரும் முடிவு செய்வதாவது. பெண்கள் அனைவர்க்கும் வயது வந்த சில மாதத்திற்குலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று ஊருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட, அங்கு தொடங்குகிறது “அயலி” என்ற இனைய தொடர்.
வீரப்பண்ணை என்ற ஊருக்கு பொதுமக்கள் அனைவரும் பஞ்சம் பிழைக்க வர, 500 வருடங்கள் ஆகியும் ஊர் கட்டுப்பாட்டை மீறாது குழந்தை திருமணம் செய்து வருகின்றனர். கதை நடப்பது 1990களில்.
படத்தின் ஹீரோயினான, தமிழ்(அபிநயா ஸ்ரீ) அந்த கட்டுப்பாடுகளை தகர்த்து ஊரை வழி நடத்தினாரா? இல்லையா? என்பது தொடர்கதை.
முதலில் நாம் பாராட்ட வேண்டியது தமிழ் கதாபாத்திரத்தில் நடித்த அபிநயாவை தான். காரணம், முழு கதையையும் அவர் சுமந்து சென்ற விதம் தான். அவரின் கண்களை தவிர நம்மால் வேர் எதையும் கவனிக்க முடியாது என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு கலை அவரின் முகத்தில். அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார் அபிநயா.
சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா. ஊர் தலைவரான சிங்கம்புலியின் மகன். இவருக்கு தான் அபிநயாவை மனம் முடிக்க முடிவு செய்திருப்பார். படத்தின் மாப்பிள்ளையும் இவரே, வில்லனும் இவரே. இதற்கு முன் “பரோல்” என்ற படத்தின் மூலம் மாஸ் காட்டிய லிங்கா, இந்த படத்தில் சைலன்ட் கில்லராக மிரட்டியுள்ளார்.
அபிநயாவின் தாய் மற்றும் தந்தையாக வரும் அனுமோல் மற்றும் “அருவி” மதன் இருவரும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கண்கலங்க செய்தனர்.
அபிநயாவின் தோழியாக வரும் லவ்லின் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக நடித்திருந்தார்.
சிங்கம் புலி, TSR ஸ்ரீனிவாசன் இருவரும் காமெடியான சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து அவ்வப்போது சிரிப்பையும், பல இடங்களில் கலகம் முடியும் பாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளனர்.
இனைய தொடர் என்பதால் ஒரு சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்தினாலும் கடைசி இரண்டு எபிசோடுகளின் இருக்கை நுனியில் நம்மை அமரச்செய்கிறார் இயக்குனர் மதன் குமார். குறிப்பாக வசனங்கள் அனைத்தும் கைத்தட்டலுக்குரியவை.
பெண்களின் துன்பத்தை படமாக்கி அதற்கு காரணத்தை விளக்கி தீர்வையும் தந்த மதன் குமார் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.