லைகா நிறுவனம் தயாரிப்பில், “வைகை புயல்” வடிவேலு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில், சுராஜ் இயக்கிய படம் நாய் சேகர் – ரிட்டர்ன்ஸ். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கதைப்படி,
நாய் சேகர் ( வடிவேலு ) ஊரில் உள்ள பெரிய பணக்காரர்களின் நாயை அவரின் குழுவினருடன் திருடுவார் , இதுதான் இவரின் வேலை. அப்படி ஒருநாள் நாய் சேகர் ஆனந்த் ராஜின் நாயையும் திருடிவிடுகிறார், ஆனந்த் ராஜ் அந்த ஏரியாவின் தாதா இவர் ஜெயிலிருந்து வெளியே வந்ததும் தனது நாய் காணாமல் போனதால் ஆத்திரமடைகிறார். தனது நாயை நாய் சேகரின் கும்பல்தான் திட்டுவிட்டார்கள் என தெரிந்ததும், இரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.
பிறகு நாய் சேகர் தனது பாட்டியிடம் இந்த ஊரை விட்டு வெளியே போகவேண்டும் என்று சொல்கிறார் அப்போது அவரின் பாட்டி ஒரு விஷயத்தை சொல்கிறார், திருமணமாகி உன் அப்பா அம்மவிற்கு குழந்தை பிறக்கவில்லை அப்போது ஒரு ஜோசியரிடம் சென்றதும் அவர் ஒரு நாய் குட்டியை கொடுத்தார். அதன் பிறகுதான் நீ பிறந்தாய் என்கிறார், மற்றும் அந்த நாய் நம்மிடம் இருந்தவரையிலும் நாம் மிக சநதோஷமாகத்தான் இருந்தோம் அப்போது நம்மிடம் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் நாயை திருடி சென்றுவிட்டார், அதன் பிறகுதான் நம் குடும்பம் இப்படி கஷ்டப்படுகிறது என்கிறார் பாட்டி. பிறகு நாய் சேகர் ஹய்தராபாத்துக்கு சென்று தனது நாயை திருடியவரை பழிதீர்த்து, நாயை மீட்டாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் சுராஜ் அவருக்கே உண்டானாக நகைச்சுவை பாணியில் கூறியுள்ளார். அது பெரிதாய் எடுபடவில்லை.
வடிவேலு எவ்வளவு முயற்சித்தும் அவரால் முந்தய வடிவேலுவாக இருக்க முடியவில்லை. எலி படத்தில் அவர் செய்த சேட்டை தான் இப்படத்திலும்.
அனந்தராஜின் 5 காமெடிகளும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி என அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
படத்தின் தூண் சந்தோஷ் நாராயணன் தான். ரசிக்கும் வகையில் பின்னணியும், சூப்பர் ஹிட் பாடல்களும் படத்திற்கு மிக முக்கிய பலமாக அமைந்துள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – ஹவ் டூ ஐ டெல் யூ?