மிக குறுகிய ஒரு காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இது. காரணம் நான் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்து வருகிறேன். பொன்னியின் செல்வனை பற்றி பேச தான் நான் இங்கு வந்தேன்.
இன்னும் இரு தினங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவரவுள்ளது. பொன்னியின் செல்வன் சாதாரண விஷயம் அல்ல. ஆனால், அதை கட்சிதமாக மணிரத்னம் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தை நான் என் சாதாரண விஷயம் இல்லை என்றேன் என்றால். இது அனைவர்க்கும் தெரிந்த ஒரு கதை. அனைவரும் இக்கதையையோ படித்துவிட்டு. பல காட்சிகளை எதிர்பார்த்து வருவார்கள். ஆனால், கதையை புத்தகம் போல் அப்படியே எடுக்கவேண்டியிருந்தால் கிட்ட தட்ட 10 பாகங்கள் எடுக்கவேண்டியிருக்கும். அதை சுருக்கி மிக அழகாக கதையமைத்து இயக்கியிருக்கிறார் மணிரத்னம் என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
இப்படம் வெளியான பின், தமிழ் நாட்டை தவிர்த்து. சோழர்களை பற்றி தெரியாத பல மாநிலங்களுக்கு, சோழர்களை பற்றிய பெருமையை இப்படம் எடுத்துரைக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது, எப்படி அனைவரும் தாஜ் மஹால் சென்று பார்க்கிறார்களோ. அதே போல் தஞ்சை பெரிய கோவிலை அனைவரும் பார்ப்பார்கள். தஞ்சை பெரிய கோவில் ஒரு மிகப்பெரும் சுற்றுலா தளமாக மாறும் என்று நம்பிறேன், என்றார்.
அடுத்து நான் நடிக்கும் படங்கள்,
முதன்மை பாத்திரம், ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறேன். எப்படி அனைவரும் “VERSATILE” நடிகர் என்று பெயர் எடுக்கிறார்களோ. அதே போல் அனைத்து பாத்திரத்திலும் நடித்து ஒரு சிறந்த கலைஞனாக இருக்க ஆசைப்படுகிறேன், என்றார் “சுப்ரீம் ஸ்டார்” சரத் குமார்.