கல்கியின் எழுதிய பொன்னியின் செல்வனை மையமாக வைத்து இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம், விக்ரம் பிரபு, ரகுமான், சரத்குமார், பிரபு மற்றும் பலரின் நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைக்க, மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
கிட்டதட்ட மூன்று தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இக்கதையை படமாக்க முயற்சித்து முடியாமல் போன நிலையில், இப்படத்தை எடுத்திருப்பதே பெரும் சாதனையாக இந்திய சினிமா பார்க்கிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை கொண்ட இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அப்டேட்,
இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. பாகம் 1 வெளியான அடுத்த 6 முதல் 9 மாதங்களில் பாகம் 2 வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
நீக்கம் செய்யப்பட்ட காட்சிகள்,
மேலும், பொன்னியின் செல்வன் கதையில் வரும் சில காட்சிகளை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர் இயக்கிய “பாகுபலி” திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்.
அதில், பொன்னி நதியில் அருண் மொழி வர்மன் காப்பாற்றப்பட்ட காட்சி, அருண் மொழி வர்மன் யானையை அடக்கும் காட்சி போன்ற சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த காட்சிகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் எப்படி எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு,
நாங்கள் அந்தக் காட்சிகளை படமாக்கவில்லை என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளது படக்குழு.
இதையறிந்த ரசிகர்கள் பொன்னி நதியில், பொன்னி மாதா அருண் மொழி வர்மனை காப்பாற்றியதால் தான் அவருக்கு “பொன்னியின் செல்வன்” என்றே பெயர் வந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த காட்சியை இயக்குநர் மணி ரத்னம் எப்படி காட்சிபடுத்தியிருப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.