இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க #Atman சிலம்பரசன் நடிப்பில் உருவான படம் தான் “வெந்து தணிந்தது காடு”. உணர்வு மற்றும் உணர்ச்சிமிக்க காதலுடன், திரில்லர் மற்றும் ஆக்ஷன் கதைகளை இயக்குவது கௌதம் மேனனின் சிறப்பு. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் சிம்புவை ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்திலும், வியக்கவைக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்தவர் இயக்குநர் கௌதம் மேனன். அதன்பிறகு அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவை வைத்து இயக்கினார் அந்த படமும் நன்றாக பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்தப் படத்தில் சிம்புவை மீண்டும் இயக்கியிருக்கிறார். அதைப் பற்றி விமர்சனம் பார்ப்போம்.
கதைப்படி,
பட்டதாரியாக இருக்கும் முத்து வீரன்(சிம்பு) தனது கிராமத்தில் முட்காடுகளை பராமரித்து வருகிறார். அந்தக் காட்டில் எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்தால் பல காயங்களுடன் உயிர்பிழைக்கும் முத்து. மும்பையில் பரோட்டா கடை வைத்திருக்கும் முத்துவின் மாமா கிரகப்பிரவேசத்திற்கு வருகிறார். அவருடன் முத்துவை அனுப்பி வைக்க முடிவு செய்கிறார் முத்துவின் அம்மா. திடீரென்று மாமா தற்கொலை செய்து கொள்ள அருளியல் பரோட்டா கடையை பார்த்துக் கொள்ள மொத்த மும்பைக்கு செல்கிறார். அங்கு மாமா பரோட்டா மாஸ்டர் இல்லை என்று தெரிய வரும் போது அதிர்ச்சியடைகிறார். அதற்குப் பின் அதற்கு பின் நடப்பது படத்தின் மீதிக்கதை.
இப்படத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளார் சிம்பு. தான் ஒரு சிறந்த நடிகன் தான் என்பதை படம் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் சிம்பு.
அழகு தேவதையாக சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார் சித்தி இதனானி.
விக்ரம் படத்தில் கலக்கிய ஜாபர், இப்படத்திலும் கெத்து காட்டியுள்ளார். அப்புக்குட்டி மிடுக்கான கதாபாத்திரமாக வந்து போகிறார்.
பொதுவாக கௌதம் மேனன் படம் என்றாலே அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும். அதிலும் காதல் காட்சிகள் அனைவரையும் பரவசப்படுத்தும். ஆனால், இப்படத்தில் அப்படி இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமே. இரண்டாவது பாதி திரைக்கதையில் இன்னும் செய்து விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி படத்திற்கு வலுவாக அமைந்துள்ளது.
நாயகன், சத்யா, கே.ஜி.ஏஃப் என பல கேங்க்ஸ்டர் பட வரிசையில் இதுவும் ஒன்று. ஆனால், இதில் இரண்டாம் பாகம் வருவது தான் வித்தியாசம்.
வெந்து தணிந்தது காடு – இரண்டாவது பாகத்தில் தணியுமா?