ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது! இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம் !!

 

பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ஹனுமான் படத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் வர்மா அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு சாகச காவியத்தை ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் ப்ரீக்வுலாக உருவாகவுள்ளது. , ஹனுமான் படத்தின் முடிவில் இப்படம் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதை ஏற்கனவே முழுமையாக தயாராகிவிட்டது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர் மற்றும் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர், ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம், இப்படம் மூலம் பிரசாந்த் வர்மா முதல் முறையாக டிராகன்களை இந்திய திரைக்கு கொண்டு வருகிறார். உலகத்தரத்திலான VFX மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், ரசிகர்களுக்கு இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத அனுபவத்தை இப்படம் வழங்கும்.

ஜெய் ஹனுமான் திரைப்படம் ஐமேக்ஸ் 3டியில் வெளியாகவுள்ளது. இந்த மாபெரும் படைப்பு குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

படக்குழு இன்று, ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *