முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண்விஜய் – சினம் பற்றி படக்குழு;

மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள புதிய படம் ‘சினம்’. அருண் விஜய் கதாநாயகனாகவும் பாலக் லால்வானி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் என்ற வார்த்தையை கேட்டதுமே தற்போதுள்ள இளைஞர்களுக்கு நினைவுக்கு வரும் நடிகர் ஆக்ஷனில் அதகளம் செய்துக் கொண்டிருக்கும் அருண் விஜய் தான். ஆக்ஷன் கதை எழுதும் இயக்குனர்களின் முதல் தேர்வும் அருண்விஜய் தான். அந்த அளவிற்கு மெருகேற்றிய உடலைமைப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்கக் கூடிய அருண்விஜய் மீண்டும் ஒரு ஆக்ஷன் பிளாக் கதையுடன் வருகிற 16ம் தேதி திரையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளார்.

சினம் படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது…

கிரைம் திரில்லர் கதையில் மிகைப்படுத்தாத எதார்த்தமான கதாபாத்திரங்கள் அமைத்து மக்கள் ரசிக்கும்படி ‘சினம்’ படம் உருவாகி இருக்கிறது. இந்த கதையை கேட்டவுடன் அருண்விஜய், தான் இதுவரை நடித்திராத கேரக்டராகவும், முற்றிலும் மாறுபட்ட யதார்த்தமான கதாபாத்திரமாகவும் உருவாகியுள்ளதற்காக டைரக்டர் குமரவேலனை பாராட்டினார். மேலும், கதையை உடனடியாக ஓகே செய்ததுடன், தனது தந்தையும் மூத்த நடிகருமான விஜய் குமாரையே இந்த படத்தை தயாரிக்கவும் செய்துவிட்டார்.

கொரோனா காலத்தில் நம்பிக்கை இழக்கக்கூடிய நேரத்தில் திரைப்பட குழுவிற்கு தயாரிப்பாளராக விஜயகுமார் நம்பிக்கை அளித்துள்ளார். மேலும் இந்த படத்தை ஓ.டி.டி. இல் வெளியிடாமல் தியேட்டரில் தான் வெளியிடவேண்டும் என்பதில் அருண் விஜய் திட்டவட்டமாக இருந்தார். இது ரசிகர்கள் போற்றி கொண்டாடக்கூடிய படமாக, அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாகவும் இருக்கும். ‘குற்றம் 23’, ‘தடம்’ போன்ற அருண் விஜயின் முந்தைய படங்களின் வரிசையில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் கிரைம்த்ரில்லர் படமாக சினம் உருவாகி இருக்கிறது. படத்தில் பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் மிரட்டியிருக்கிறார். அவரது யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்க்கச் செய்யும்.

சபீர் இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், ராஜா முகமது படத்தொகுப்பில், கலை இயக்குநர் மைக்கேல், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படம் வருகிற 16ந் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *