சூப்பர் ஆர் சுப்ரமணியன், அஞ்சு கிருஷ்ணா, வீர சுபாஷ் நடிப்பில், ஓம் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வெள்ளிமலை”.
கதைப்படி,
வெள்ளிமலை அடிவாரத்தில் ஒரு கிராமம் இருக்கிறது, அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு சித்த மருத்துவரை குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக அந்த ஊர் மக்கள் அவரிடம் இனி மருந்து சாப்பிட கூடாது என முடிவு எடுக்கிறார்கள்.
அதன் பின் அவரின் அடுத்த தலைமுறைக்கும் அதே நிலைமை தான். ஆனால், நம்பிக்கை இழக்காமல் ஒரு நாள் இந்த ஊரே என்னிடம் மருந்து வாங்கும். அனைவருக்கும் நான் வைத்தியம் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன் ஊரில் தங்கி வருகிறார் சுப்ரமணியன்.
பின்னர், ஊர்மக்கள் வைத்தியரான சுப்ரமணியன் அவர்களையும், அவரின் மருந்தையும் ஏற்று கொண்டார்களா? இல்லையா? என்பது மீதிக்கதை..
முண்டாசுப்பட்டி, ஜெய் பீம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆர் சுப்ரமணியன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சித்தர் மற்றும் வைத்தியராக நடித்துள்ள முற்றிலும் எதார்தமாகவே இருந்தது. முழுப்படத்தை இவர் தாங்கி நடித்துள்ளார் என்பது பாராட்டத்தக்க விஷயம்.
சுப்ரமணியன் அவர்களின் மகளாக நடித்திருக்கும் அஞ்சு கிருஷ்ணா, கிராமத்து பெண்ணாக கலையாக வந்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
அஞ்சு கிருஷ்ணாவின் லவ்வராக வரும் வீர சுபாஷுக்கு பெரிதாக படத்தில் ஸ்கொர் செய்ய இடம் இல்லை. ஆனால், நடித்த காட்சிகளுக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
ஓம் விஜய் நல்ல கதையை தேர்வு செய்திருந்தாலும் இயக்கத்தில் இன்னும் கத்துக்குட்டியாக இருக்கிறாரோ என்ற எண்ணம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியும், சித்த மருத்துவத்தின் முக்கிய துவத்தை ஆழமாக சொல்லியிருந்தால் அவரின் நோக்கம் நிறைவேறியிருக்கும்.
படத்திற்கு பெரும் பலம் இசை தான். என் ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி சூப்பர், பாடல்கள் கேட்கும் ரகம்.
படத்திற்கு கூடுதல் அழகு சேர்த்து, மனிபெருமாளின் ஒளிப்பதிவு. நிச்சயம் அவர் சினிமா வட்டாரத்தில் பேசும்பொருளாக வளம் வருவார்.