பண மோசடி குற்றச்சாட்டு குறித்து நந்தாவின் பதில் இது தான்;

சில தினங்களுக்கு முன் விஷாலிடமிருந்து நடிகர் நந்தா 4.5 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டதாக நமக்கு கிடைத்த தகவல்களை செய்தியாக பதிவு செய்திருந்தோம்.

முழு விவரம் கீழே,

மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்து நாம் நடிகர் நந்தாவுக்கு தொடர்பு கொண்டு பேசியதில் அவர் சில விளக்கங்களை பகிர்ந்துகொண்டார்.

விஷாலிடம் இருந்து கிட்ட தட்ட 4.5 கோடி ரூபாய் பணம் பெற்று நீங்கள் தர மறுப்பதாகவும் அவரின் அழைப்புகளை தவிர்த்து வருவதாகவும் எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது அது பற்றிய உங்களின் கருத்து என்னவென்ற கேள்விக்கு.

உங்களுக்கு இப்படி ஒரு செய்தியை யார் கூறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனது தரப்பில் கணக்கு அனைத்தும் சரியாக உள்ளது. உங்களுக்கு தகவல் கொடுத்தவருடன் நீங்கள் கான்பரென்ஸ் கால் செய்தால் உங்களுக்கு என்ன நடந்தது என்று புரியும் என்றார் நந்தா.

விஷாலுக்கு நீங்கள் கொடுத்த சம்பளம் 6 கோடி தானா?

விஷாலுக்கும் எனக்கும் உள்ள ஒப்பந்தத்தை என்னால் வெளியில் சொல்ல இயலாது. மேலும், ஒரு தயாரிப்பாளராக ஹீரோவின் சம்பளத்தை வெளியில் சொல்லுவதும் சரியாக இருக்காது.

மேலும், எனது தரப்பில் எந்த வித குழப்பமும் இல்லை. நான் 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன், ஒரு சில கோடிகளுக்காக நான் என் நற்பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டேன். என்று வெளிப்படையாக பேசினார் நந்தா.

எனவே, இந்த பண மோசடி குறித்தும். நந்தாவை பற்றி உலா வரும் சில தகவல்களை பற்றியும் முற்று புள்ளி வைக்க விஷாலால் மட்டுமே முடியும். தனியாக ஒரு பிரஸ் மீட் கொடுக்காவிட்டாலும் தன் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இருவருடனும் சேர்ந்து ஒரு செல்பியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் கூட போதும்.

மேலும், இப்படி பட்ட தகவல்களை விஷால் மற்றும் நந்தா, ரமணாவை பிரிப்பதற்காக சிலர் கிளப்பிவிடும் வதந்தியா என்று சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *