யாத்திசை என்றால் “தென் திசை” என்று பொருள்.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்திசையான பாண்டிய நாட்டிற்கெதிராகப் போராடிய எயிணர் எனும் தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’.
யாத்திசை என்ற வரலாற்று படத்தை, அதிலும் பாண்டியர்களின் பெருமையை பேசும் படத்தை இயக்கியதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் தரணி இராசேந்திரன்.
சோழர்களின் பெருமையை பேசும் விதத்தில் ஏற்கனவே படங்கள் வந்துவிட்டன. அதனால் பாண்டியர்களை பற்றி பேச நான் முன்வந்தேன். ஒரு வேலை பாண்டியர்களை பற்றி ஏற்கனவே பேசப்பட்டிருந்தால், சேரர்களை பற்றி பேசியிருப்பேன்.
நான் ஓரு படம் எடுக்க வேண்டும் என்பதை விட, நம் வரலாற்றை பதிவு செய்யவேண்டும் என்று தான் ஆசைபடுகிறேன். அதனால், தான் “யாத்திசை” படத்தில் வரும் எயினர்கள் சங்க தமிழை பேசும் விதத்தில் படத்தை இயக்கியுள்ளேன் என்றார்.
யாத்திசை புதிய முகங்களால் உருவான, ஒரு புதிய முயற்சி. சிறு குடியை (எயினர்கள்) சார்ந்த மக்கள், பேரரசான (பாண்டியர்)களை எதிர்த்து எப்படி போர் செய்தனர்? எதற்காக போர் செய்தனர்? என்பதே இப்படத்தின் மையக்கரு.
யாத்திசை படத்தின் விமர்சனத்தை கீழே படியுங்கள்,