பிச்சைக்காரன் 2 விமர்சனம் – (3.25/5);

விஜய் ஆண்டனி, காவ்யா, ராதா ரவி, தேவ் கில், யோகி பாபு, ஹரிஷ் பேரடி, ஜான் விஜய் நடிப்பில், விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பு செய்து வெளியிட்டிருக்கும் படம் “பிச்சைக்காரன் – 2”.

கதைப்படி,

விஜய் குருநாதன் என்று இந்திய அளவில் 7வது பெரிய பணக்காரராக வருகிறார் விஜய் ஆண்டனி. அவருடன் இருக்கும் நண்பர்களான, தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி மூவரும் விஜய் ஆண்டனியின் லட்சம் கோடி சொத்துக்களை அபகரிக்க திட்டம் போடுகிறார்கள்.

அந்த சமயத்தில், விஜய் குருநாத்தை கொன்றால் எந்த பயனும் இல்லை, அதற்கு பதில் வேறு ஒருவரின் மூளையை மாற்றுசிகிச்சை மூலம் மாற்றிவிட திட்டம் போடுகிறார் தேவ் கில்.

அப்போது சத்யா கதாபாத்திரத்தில் விஜய் குருநாத் தோற்றத்தில் வருகிறார் டபுள் ஆக்ஷன் கதாபாத்திரமான விஜய் ஆண்டனி. இருவருக்கும் மூளையை மாற்றி வைத்திட, விஜய் குருநாத்தின் உடலும் சத்யாவின் மூளையும் ஒன்றாக இணைகிறது.

அப்போது, இவர்களின் திட்டத்திற்கு ஒப்புதல் தராத விஜய் ஆண்டனி. தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி என மூவரையும் கொன்று “லட்சம் கோடி” ரூபாய்கு சொந்தக்காரர் ஆகிறார்.

அதன் பின் அந்த பணத்தை என்ன செய்தார்? அவரை சுற்றி இருந்த அரசியல் ஆபத்துகள் என்ன? ANTI BIKILI என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? என்று தெரிந்துகொள்ள படத்தை காணலாம்.

கதையில் புதுமையை முயற்சித்து, இப்படி ஒரு கான்செப்டா? என்று வியக்க வைக்கிறார் விஜய் ஆண்டனி.

ஆனால், நடிப்பில் கொஞ்சம் தேர்ச்சி தேவையே. மேலும், ஆக்ஷனில் அதகளம் செய்து ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

படத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் வந்து செல்கிறார் காவ்யா.

தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி மூவரும் வழக்கம் போல் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர்.

VFX மட்டும் கொஞ்சம் சிறப்பாக செய்திருந்தால் படம் பார்த்த முழு திருப்தி நிலைத்திருக்கும்.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். படத்தின் இரண்டாம் பாதி சற்று தொய்வான படத்தையே வழங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *