தீர்க்கதரிசி திரைவிமர்சனம் – (3.25/5);

பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்கி இருக்கும் படம் “தீர்க்கதரிசி”. சத்யராஜ், அஜ்மல், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் இது.

கதைப்படி,

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் உயிரிழக்கப்போவதாக மர்ம நபரிடமிருந்து அழைப்பு வருகிறது. அதனை பிராங்க் கால் என போலீசார் நினைக்கும் நிலையில் நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடக்கிறது.

உடனடியாக விசாரணை அதிகாரிகளாக ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் நியமிக்கப்பட, அடுத்ததாக ஒரு விபத்து நிகழ்கிறது. இதனால் வழக்கு போலீஸ் உயரதிகாரியான அஜ்மலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

எவ்வளவு விசாரணை செய்தும் மர்ம நபரால் முன்கூட்டியே சொல்லப்படும் அடுத்தடுத்து நிகழும் அசம்பாவிதங்களை அஜ்மல் குழுவினர் துப்பறிய முடியாமல் திணறுகின்றனர்.

மக்கள் மர்ம நபரை தீர்க்கதரிசி என அழைக்கின்றனர். உண்மையிலேயே தீர்க்கதரிசி யார்? அவருக்கும் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை க்ரைம் த்ரில்லர் பாணியில் விவரிக்கிறது படம்.

முதல் பாதியில் படத்தின் கதையை ஓபன் செய்யாமல், க்ளைமாக்சில் கதையையும் காரணத்தையும் விவரித்து புதுமையை காட்டியுள்ளனர் இயக்குனர்களான பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டி.

இப்படியான ஒரு த்ரில்லர் கதையில், சாதியையும், ஆணவ கொலையையும் பேசியது பாராட்டத்தக்கது.

அஜ்மலின் நடிப்பு அவரின் முந்தைய படங்களை விட மிடுக்கான தோற்றத்துடன், மிக யதார்த்தமாக நடித்து கவனத்தை பெற்றுள்ளார்.

சத்யராஜ் ஒரு கேமியோ கொடுத்து “என்னமா கண்ணு சௌக்கியமா” என்று ஒரு ஹீரோயிசத்தை காட்டி கலக்கியுள்ளார்.

மிக வலுவான ஒரு பாத்திரத்தை மிகவும் சுலபமாக நடித்து அனுபவத்தை காட்டியுள்ளார் ஸ்ரீமன்.

படத்தில் நம்மை ரசிக்க வைத்தது, ஜெ.லக்ஷ்மணின் ஒளிப்பதிவும், பாலசுப்ரமணியத்தின் இசையும் தான்.

தீர்க்கதரிசி – சாதியற்றவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *