கண்ணை நம்பாதே விமர்சனம் – (3/5)

உதயநிதி ஸ்டாலின், ஆத்மீகா, பிரசன்னா, பூமிகா, ஸ்ரீகாந்த் நடிப்பில், மு.மாறன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “கண்ணை நம்பாதே”.

கதைப்படி,

ஒரு சில காரணங்களால் வேறு வழியின்றி பிரசன்னாவின் வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

அப்போது ஒரு நாள் இரவு, உதயநிதி அவரது நண்பர் சதீஷ், பிரசன்னா ஆகியோர் தண்ணியடிக்க செல்லுகின்றனர். பிரசன்னாவும், சதீஷூம் தண்ணியடிக்க, உதயநிதி, கார் ஓட்டமுடியாத நிலையிலிருக்கும், பூமிகா சாவ்லாவை அவரது வீட்டில் கொண்டுபோய் விடுகிறார். தனிமையிலிருக்கும் பூமிகா சாவ்லாவின் மேல் பிரசன்னாவுக்கு சபலம் ஏற்படுகிறது.

இதனால் உதயநிதிக்கு தெரியாமல் பூமிகா சாவ்லாவின் வீட்டிற்கு செல்லும் பிரசன்னா, அவரை கற்பழிக்க முயற்சி செய்கிறார். அங்கு நடந்த சண்டையில் உயிரிழக்கிறார் பூமிகா. அதன் பின், கார் டிக்கியில் பூமிகாவின் உடலை வைத்துவிட்டு உதயநிதி கொன்றுவிட்டது போல் நாடகமாடுகிறார் பிரசன்னா.

அதன் பின், பூமிகாவை கொன்றது யார் என தெரிந்துகொள்ள உதயநிதி ஆராயும் சமயத்தில், மற்றொருவரியும் ஆக்சிடென்ட் செய்து கொலை செய்து விடுகிறார் பிரசன்னா. இப்போது இரண்டு பிணங்களையும் அப்புறப்படுத்த முடிவு செய்யும் பிரசன்னா மற்றும் உதயநிதி என்ன ஆனார்கள்? உதயநிதிக்கு உண்மை தெரிந்ததா? இரண்டு பிணத்தையும் அப்புறப்படுதினார்களா? என்று பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக அமைந்தது தான் படத்தின் இரண்டாம் பாதி.

கர்ப்பினி பெண்களிடம் சுரக்கும் ‘CPH4’ – 6-carboxytetrahydropterin synthase என்ற திரவத்தை சுற்றி நடக்கும் க்ரைம் குறித்து, கதை எழுதியிருக்கிறார், இயக்குனர் மு.மாறன். இந்த ஒன் லைன் வேறு ஏதோ ஒரு மொழி படத்தில் வந்திருப்பது போல் எண்ணம்.

லாஜிக் இல்லாமல் இப்படத்தை பார்த்தால் ஒரு நல்ல த்ரில்லர் படமாக தான் இருக்கும்.

உதயநிதியின் நடிப்பு முந்தைய படங்களை விட சிறப்பு. குறிப்பாக அவர் உண்மையை தெரிந்துகொள்ளும் காட்சிகளில் அவரின் முகத்தில் வரும் குழப்பம் தத்ரூபமாக இருந்தது.

ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ. கருப்பையா, சென்ட்ராயன், கு. ஞானசம்பந்தம் ஆகியோர் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

சித்து இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

கண்ணை நம்பாதே – வஞ்சக உலகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *