உலகை உண்மையாக இணைக்கும் தொடர் “சிட்டாடல்” – பிரியங்கா சோப்ரா;

ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் நடிகர் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர்.

ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் இணையத் தொடர் உருவாக்கப்பட்டது, ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த தொடரின் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என வெளியாகவிருக்கிறது.

நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் பேசுகையில்,“அமேசான் ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே, சிட்டாடல் எனும் தொடரில் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியபோது, அவர் ஒரு உலகளாவிய படைப்பாக உருவாக்க விரும்பினார். – இது உலகை உண்மையாக இணைக்கும். அமேசான் பன்முகத்தன்மையை உறுதியாக நம்புகிறது, உண்மையான பன்முகத்தன்மை, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது, வெவ்வேறு தோல் நிறங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமல்ல, மக்கள் பேசும் விதத்தைக் கேட்பதன் மூலமும், உண்மையில் கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலமும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாடு மற்றும் கண்டம் முழுவதும் பரவக்கூடிய… நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது. எனவே, எனக்கு கதை கூட முழுமையாக தெரியாது, ஆனாலும் இதில் நான் நடித்திருக்கிறேன்.” என்றார்.

சிட்டாடல் பற்றி…
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும் குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர். ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் ( ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர்.

சிட்டாடல் இணைய தொடர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கதைகளுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறது. ஒவ்வொரு தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது. மேலும் சிறந்த திறமையாளர்களைக் கொண்டு தனித்துவமான உலகளாவிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இந்த தொடர் ஏற்கனவே இத்தாலி மற்றும் இந்தியாவில் மாடில்டா டி ஏஞ்சலிஸ், வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடிக்கும் தொடர்களாக தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *