வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, அரவிந்த் சாமி, க்ரித்தி ஷெட்டி, சரத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஸ்டடி”. தெலுங்கு சினிமா துறை நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் க்ரித்தி ஷெட்டி நடித்திருந்தாலும். தமிழ், தெலுங்கு என ஒரு “பை-லிங்குவல்” படமாக தான் “கஸ்டடி” உருவாகியுள்ளது.
இன்னும் இரு தினங்களில் (மே 12) இப்படம் வெளியாகவுள்ள நிலையில், புக்கிங் ஓபன் செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகியும், முழுமையாக 20 டிக்கெட் கூட விற்றுப்போகாத நிலையில் தான் “கஸ்டடி” திரைப்படத்தின் முன் பதிவு உள்ளது.
சென்னையில், முதல் நாள், முதல் காட்சி என்றாலே ரசிகர்கள் முதலில் தேர்வு செய்வது “ரோகினி” மற்றும் “கமலா” திரையரங்கங்கள் தான். ஆனால், அவ்விரண்டு திரையரங்கிலும், இந்த செய்து பதிவேற்றம் செய்யப்படும் நேரம் வரை 14 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு ஆகியுள்ளது.
மேலும், இதே சூழலில் இப்படம் சிக்கிக் கொண்டால் பல திரையரங்குகளில் ஷோ ப்ரேக் ஆகா வாய்ப்புள்ளது.
இதற்கு காரணம், வெங்கட் பிரபு தமிழ் இயக்குனர் தான் என்பதை ஆடியன்ஸ் மறந்து விட்டார்களா? இல்லை இது தெலுங்கு ஆடியன்ஸுக்கு மட்டும் எடுக்கப்பட்ட படமா? என்ற இரு கேள்விகள் வந்து சென்றாலும்.
படத்தின் ஷூட்டி முதல் ரிலீஸ் வரை, இது ஒரு “பை-லிங்குவல்” படம் என்பதை படக்குழு அழுத்தமாக பதிவு செய்ய தவறியது தான் இப்படத்தின் வரவேற்பை குறைத்ததற்கு முக்கிய காரணம் என சினிமா வட்டாரங்களில் பல வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
அதுமட்டுமின்றி, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம். சென்னையில் 25க்கும் குறையவான திரையில் வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.