தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடி கட்டி பறந்துக் கொண்டிருந்த நிறுவனம் தான் “சத்ய ஜோதி பிலிம்ஸ்” நிறுவனம்.
ஆனால், தனுஷ் நடிப்பில் வெளியான “தொடரி” திரைப்படத்திலிருந்து தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. சத்ரியன், விவேகம், பட்டாஸ், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, மாறன் என ஓடிடியிலும் தோல்வியை கண்ட நிறுவனம் இது தான்.
கடந்த சில வருடங்களில் சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் வெளியான படங்களில் அஜித் நடித்த “விஸ்வாசம்” படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது.
மேலும், “ஹிப் ஹாப்” ஆதி நடிப்பில், சத்ய ஜோதி தயாரிப்பில் வெளியான “சிவகுமாரின் சபதம்” மற்றும் “அன்பறிவு” ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளது.
தற்போது, மூன்றாவது முறையாக “ஹிப் ஹாப்” ஆதி மற்றும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்துள்ள படம் “வீரன்”.
வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே ட்ரோல் மெட்டீரியலாக தான் மக்களிடையே சேர்ந்தது. அதற்கு காரணம், மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த “மின்னல் முரளி” படத்தின் சாயல் இருந்தது மட்டுமே காரணம்.
மேலும், “அன்பறிவு” படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்த ஆதி, மதுரை இளைஞராக “புள்ளிங்கோ” ஹேர் ஸ்டைலில் வந்தது அவரின் பாத்திரத்திற்கே சுத்தபலான ஒன்றாக அமைந்தது.
டைரக்டர் பலமுறை முடி திருத்தம் செய்ய சொன்ன போதும் அடம் பிடித்து மாற்றாமல் கேலிக்கு ஆளானார் ”ஹிப் ஹாப்” ஆதி. அந்த தவறை வரும் படங்களில் திருத்திக் கொண்டால் அவரின் மியூசிக் கேரியரை போல் நடிப்பிலும் ஒரு தனித்துவத்தை காட்டலாம்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. அந்த படத்தின் அப்டேட் நேற்று காலை 10 மணிக்கு வருவதாக அறிவித்து பின்னர் மாலை 4 மணிக்கே அப்டேட் வந்தது. இது போன்று அந்நிறுவனம் செய்யும் சிறு தவறுகள் தான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைவதற்கு காரணமாக அமைகிறது.
இது போன்ற குறைகளை சத்ய ஜோதியும் – “ஹிப் ஹாப்” ஆதியும் மாற்றிக் கொண்டால் மட்டுமே “கம் பேக்” கொடுத்து மக்களை எண்டர்டெய்ன் செய்ய முடியும் என்பது சினிமா வட்டாரத்தின் கருத்து.
வருகிற ஜூன் 2ம் தேதி சத்ய ஜோதி – ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள “வீரன்” திரைப்படத்தின் மூலம் ”கம் பேக்” கொடுப்பார்கள் என்று நம்புவோம்.