ரஜினி நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் ’தலைவர் 168’ உருவாகி வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இமான் இசையமைத்து வருகிறார். ரஜினியின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் இவர்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பாக ‘அண்ணாத்த’ என்று வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே அதிகாரப்பூர்வ தலைப்பாக கூட இருக்கலாம் என்கின்றனர்.
தர லோக்கலாக டைட்டில் வைத்து கமர்ஷியல் ஹிட் அடிக்க தயாராகி விட்டார் ரஜினிகாந்த் என்கின்றனர் ரசிகர்கள்.