கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு – தயாரிப்பாளர் அதிரடி
சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.
இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்து இருக்கிறார் பட தயாரிப்பாளர் ஹசீர்.
கன்னிமாடம் படம் பார்க்கிறவர்களுக்கு தங்கம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் காட்சிகள், வசனங்கள் மூலமாக இயக்குனர் போஸ் வெங்கட் சாட்டையை வீசியிருப்பார்.
இந்த படம் பார்க்கிற பெண்களை மகிழ்ச்சி படுதும் விதமாக இந்த தங்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னிமாடம் படம் பார்க்கும் பெண்கள் தாங்கள் படம் பார்த்த டிக்கெட்டுடன், படம் குறித்து அவர்களின் கருத்தை சில நிமிட வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவேண்டும்.
அதில் தேர்வாகும் சிறந்த கருத்துக்கு முதல் பரிசாக அரை சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் தங்கம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் ஹசீர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.
படம் பார்த்தால் தங்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.