இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலருடன் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் படம் “விக்ரம்”. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வரும் ஜூன் 3 தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் பூஜை துவங்கியது முதல் பர்ஸ்ட் லுக், டீஸர், க்ளிப்ம்ஸ் என பல அப்டெட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், இயக்குனர் பா.ரஞ்சித், உதயநிதி ஸ்டாலின், சிம்பு என பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.
பாடல் வரிகளின் விளக்கம்,
அப்போது மேடையில் நடன இயக்குனர் சாண்டி அவர்கள் உலக நாயகன் கமல்ஹாசனை “பத்தல பத்தல” பாடலின் வரிகளை விலகுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது “குத்துற கும்மா குத்துல கொம்மா பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே” என்னும் வரிகளை விளக்கிய உலகநாயகன் கமல்ஹாசன்.
கும்மாங்குத்து என்னும் வார்த்தையை தான் “குத்துற கும்மா குத்துல உங்க அம்மா பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்” என வைத்துள்ளோம் அதில் ஆபாச வார்த்தைகள் ஏதும் இல்லை என்று தெளிவாக விளக்கினார்.
மேலும் இந்த பாடலின்
“கஜனாலே காசில்ல
கல்லாலயும் காசில்ல
காய்ச்சல் ஜுரம் நெறய வருது
தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கைல
தில்லாலங்கடி தில்லாலே”
என்ற வரிகள் ஒன்றிய அரசை(பா.ஜ.க) விசாரிக்கும் வகையில் இருப்பதால் அந்த வரிகளை நீக்க வேண்டுமென அக்கட்சியினர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.