வலிமை திரைவிமர்சனம் – (3/5)

போனி கபூர் தயாரிப்பில், அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயன், துருவன், G.N. சுந்தரம் நடிப்பில், H.வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான படம் ‘வலிமை’.

பைக் ரேஸ் சாம்பியன் என்பதால் நேரடியாக காவல்துறையில் சேர்க்கப்படும் அர்ஜுன்(அஜித் குமார்). மதுரையில் அசிஸ்டென்ட் கமிஷ்னராக வருகிறார். அங்கு நடக்கும் தொடர் கொலைக்கு தனது திறமையால் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார். அதேசமயத்தில் சென்னையில் பைக் ஓட்டும் இளைஞர்களால் கொலை, நகை பறிப்பு, போதை பொருள் கடத்தல் என மிக மோசமான ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னைக்கு பணிமாறுதல் ஆகிறார் அர்ஜுன். வந்த சிறிது நாட்களிலே, அதுவரை கண்டுபிடிக்க முடியாத கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான வில்லன் நரேன்(கார்த்திகேயன்)ஐ அடையாளம் காண்கிறார் அர்ஜுன். நரேனை கைதும் செய்து விடுகிறார்.

தனக்கு மேலே ஒருவர் இருப்பதாக கூறி, அர்ஜுனின் உடன் பிறந்த தம்பியான குட்டியை(ராஜ் ஐயப்பா) இதில் இழுத்துவிடுகிறார் நரேன். இந்த கூட்டத்திற்குள் குட்டி சிக்கியது எப்படி? வில்லனை அர்ஜுன் எப்படி பழி வாங்கினார்.? வில்லன் கட்டுப்பாட்டில் இருந்த பல நூறு இளைஞர்களை அர்ஜுன் காப்பாற்றினாரா, இல்லையா.? என்பது மீதி கதை…

அஜித் வழக்கம் போல் தனது மாஸை விட்டுக்கொடுக்க வில்லை. மொத்த கதையையும் தானே சுமந்திருக்கிறார். அவர் வரும் அத்தனை காட்சியுமே 900 நாட்களுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து தான்.

கார்த்திகேயன் தனது கதாபாத்திரத்தின் கோபத்தையும் வன்மத்தையும் நடிப்பின் மூலம் காட்டியது பிரம்மிக்க வைத்தது.

ஹுமா குரேஷி கதைக்கு ஒரு முக்கிய பக்கபலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் அனைத்தும் ஹிட். ஜிப்ரான் பின்னனியில் தான் கற்றுக்கொண்ட மொத்த விதையை காட்டினாலும் ஏதோ ஒன்று குறைபாடாகவே இயக்குகிறது.

கதையில் கோட்டை விட்டிருக்கிறார் H வினோத். அவர் இதற்கு முன் இயக்கிய தீரன், சதுரங்க வேட்டை, படங்கள் எதார்த்த பாணியில் இருக்கும். ஆனால் இந்த கதைக்களம் எதார்த்தமாக இருந்தாலும் திரைக்கதையில் சிறிது சொதப்பல் தான். ஆனால் அவர் சொல்ல வந்த கருத்தை செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஆணித்தனமாக பதிவு செய்திருக்கிறார்.

கொரோனா கால கட்டத்தில் படப்பிடிப்பு நிறுத்தி நிறுத்தி எடுக்கப்பட்டதால். அஜித்தின் தோற்றம் ஒரு சில காட்சிகளில் மாறுபட்டு தான் தெறியும். அதில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.

அதே போல் H வினோத் படங்களில் ஹீரோயிசம் கலந்த எதார்த்த சண்டை காட்சிகள் தான் இருக்கும், இந்த படத்திலும் அப்படி தான். ஆனால் கிளைமாக்ஸ் சண்டையில் அது தவறியது.

இந்த படத்தின் கதை ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளிவந்த ‘மெட்ரோ’ படத்தின் கதையாக இருந்தாலும் பைக் ஸ்டண்ட் இந்த படத்தை கூடுதலாக தாங்கி பிடித்திருக்கிறது.

வெளிப்படையாக சொன்னால் ‘பிங்க்’ படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ என ரீமேக் செய்து அதில் ஒரு சண்டை காட்சியை வைத்து ரசிகர்களை வியத்தியது போல் இந்த படமும் ஒரு ரீமேக் தான்.

திலிப் சுப்புராயன் ஸ்டண்ட்களில் மிரட்டியுள்ளார். படத்தில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் விருந்து.

பைக் ஸ்டண்ட்காக இவர்கள் செய்த உழைப்பும் முதற்சியும் தமிழ் சினிமாவில் இனி வரப்போகும் படங்களுக்கு சவால் தான்.

இது ஒரு பன் மொழி படம் என்பதால் இவர்கள் தேர்வு செய்த நடிகர்கள் ரைட் சாய்ஸ். ஹிந்திக்கு ஹுமா குரேஷி, தெலுங்குவிற்கு கார்த்திகேயன், மலையாளம் ரசிகர்களுக்கு துருவன் என வெவ்வேறு மொழி நடிகர்கள்.

மொத்தத்தில் பைக் வைத்து வழிப்பறி செய்யும் கும்பலுக்கும், பைக் ரேஸ் சாம்பியனுக்கும் நடகும் யுத்தம் இந்த வலிமை.

வலிமை – தாயின் அன்பு தான் உண்மையான வலிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *