வலிமை படத்தின் மூலம் போனி கபூருக்கு வந்த போனி இவ்வளவா?

வலிமை படத்தின் மூன்று நாள் வசூல் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Valimai Exclusive: Stills are out! - TruthUnfold

H வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு தியேட்டரில் இரவு 1.30 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அந்த அளவுக்கு வலிமைக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

வலிமை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூபாய் 300 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

வலிமை படம் ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் ரூ. 1.82 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது வலிமை. வலிமை படம் ரிலீஸான முதல் நாளே உலக அளவில் ரூ. 96 கோடி வசூல் செய்திருக்கிறது.

Valimai Movie UHD stills | 123HDgallery

அமெரிக்காவில் ரிலீஸான மூன்று நாட்களில் 300,000 டாலர்களுக்கு மேல் வசூல் செய்திருக்கிறது வலிமை. இது விஸ்வாசம் படத்தின் மொத்த வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வலிமை படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. வலிமைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

Tharani ཞɬƙ on Twitter: "#Valimai 100+crore WW in just 3 days #AjithKumar King of Box Office 😎🥰 #ValimaiBlockbuster #VALIMAIConquersBoxOffice #BlockbusterValimai #HVinoth #ValimaiEnters100Crore https://t.co/X6QsceIhUb" / Twitter

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *