Skip to content
November 17, 2026
Ilanchoorian.com – Tamil News | Health | Tamil Cinema | Technology | Sports News

Ilanchoorian.com – Tamil News | Health | Tamil Cinema | Technology | Sports News

  • Home Trend
  • செய்திகள்latest news in tamil online
    • தேசிய செய்திகள்India News
    • உலக செய்திகள்World news online
    • தமிழகம்tamilnadu-news
    • விளையாட்டு செய்திகள்sports news online
    • வீடியோ
  • சினிமாcinema-news-online
    • சினிமா செய்திகள்
    • EventsMovie Events online
    • ExclusivesMovie Exclusives online
    • Interviews
    • Photo ShootsMovie Photo Shoots online
  • GalleryMovies Gallery online
    • ActorsActors gallery online
    • ActressActress gallery online
    • Movie Wall PapersMovie Wall Papers
  • விமர்சனம்Movie reviews online
  • அரசியல் செய்திகள்
  • VideosVideos
    • InterviewsInterviews
    • Promos
    • Songs
    • Teasers
    • Trailers
  • Home
  • சினிமா
  • இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் டீசர் வெளியீடு

Contact Us

69, 2nd Floor, Sivanandha Nagar,
17th Street, Senthil Nagar,
Kolathur, Chennai - 99.
E-mail ID : ilanchoorian123@gmail.com

  • Trend
  • சினிமா
  • சினிமா செய்திகள்

இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் டீசர் வெளியீடு

hemalatha3 weeks ago01 mins

*நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு*

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்… என தொடங்கும் இந்த டீசர்,  2020 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும்…. இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதன் பின்னணி இசை ,காட்சி அமைப்பு  என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Tagged: 'பசங்க' சிவகுமார் C. K. முஜிபுர் ரஹ்மான் ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம் அனிதா சம்பத் அனுகிரஹா எஸ். நம்பியார் அருள் தாஸ் எம். சுகுமார் கார்த்திக் கே கதிரவன் சரண் சுதாகரன் சிவம் ஜிஜேந்திரன். V நிகிலா சங்கர் நிர்மல் JP பி. எல். தேனப்பன்

Post navigation

Previous: யோகி பாபுவின் 300வது திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
Next: பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

Related News

ஜான் டோ (John Doe) – திரை விமர்சனம் 4/5

hemalatha18 hours ago18 hours ago 0

டைட்டானிக் – திரை விமர்சனம் 3.5/5

hemalatha19 hours ago19 hours ago 0

பிளாக் கோல்டு (BLACK GOLD) – திரை விமர்சனம் 3.5/5

hemalatha19 hours ago19 hours ago 0
  • Recent

Trending

Address - 69, 2nd floor, Sivanandha Nagar, 17th Street, Senthil Nagar, Kolathur, Chennai - 99
Email Id: ilanchoorian123@gmail.com Powered By BlazeThemes.