ராம்ஸ், ஜான் விஜய், சிவ குமார், பாடினி குமார் மற்றும் பலரின் நடிப்பில் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவான படம் “டேக் டைவர்ஷன்”. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (17 மே) அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் பேசியதாவது,
படத்தொகுப்பாளர் விது ஜீவா பேசியபோது,
படம் மிக சிறப்பாக அமைத்துள்ளது அணைத்து வயது தரப்பினருக்கும் இந்த படம் பிடிக்கும். அனைவரும் இப்படத்தை பார்த்து வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நடிகை பாடினி குமார் பேசியபோது,
முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை இயக்குனர் அவர்கள் எனக்கு என்ன வருமோ அதை செய்யுங்கள் என்று மிகவும் ஊக்கப் படுத்தினார். அனைவரும் இந்த படத்தை பார்த்து மகிழ்வீர்கள் என்று உறுதி அளிக்கிறேன். இந்த படம் ஒரு நாளில் நடக்கும் கதை. காரில் மட்டுமே எடுத்த ஒரு படம் இது நன்றி, என்றார்.
நடிகர் சிவ குமார் பேசியபோது,
சினிமா வட்டாரங்களில் காசு இல்லை என்றால் கூட சினிமாவில் பயணிப்பதற்கு நண்பர்கள் தான் தேவை. நான் இந்த துறைக்கு வருவதற்கு என்னுடைய நண்பர்கள் காரணம். அவர்களுக்கு நன்றி. என் உறவினர்கள் அனைவருமே எனக்கு ஒத்துழைத்தார்கள். என் அம்மாவிற்கு நன்றி. இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை விநியோகம் செய்யும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் சார் அவர்களுக்கு நன்றி என்றார்.
நடிகர் ராம்ஸ் பேசியபோது,
எனக்கு பொதுவாக மேடையில் பேசி பழக்கமில்லை, இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி, என்றார்.
இசையமைப்பாளர் ஜோஸ் பேசியபோது,
இந்த படம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. அதில் ஒன்று இசையமைப்பாளர் தேவா சார் பாடியுள்ளார் அவர்களுக்கு மிகவும் நன்றி. வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குனர் சிவானி செந்தில் பேசியபோது,
டேக் டிவெர்ஷன் படம் ஒரு புதிய முயற்சி தான். வாழக்கையில் மாற்றுப்பாதையில் செல்வது அனைவர்க்கும் சலிப்பை தான் கொடுக்கும். ஆனால் மாற்றுப்பாதையில் ஒரு அற்புதம் நிகழும். அதை தான் இந்தப் படத்தில் கூறியுள்ளோம். இந்தக் கதை என் தம்பி சிவகுமாரிடம் இருந்து தான் ஆரம்பித்தது.
பொதுவாக படத்தொகுப்பாளரிகள் 5 மணிநேர படத்தை 2 மணிநேரத்திற்கு வெட்டிவிடுவார்கள். ஆனால் என் படத்தொகுப்பாளர் 2 மணி நேரப் படத்தை மாண்டேஜ் ஷாட் வேண்டும் எனக் கேட்டு மறுபடியும் ஷூட்டிங் செய்யவைத்து படத்தை மேலும் சிறப்பித்துள்ளார்.
எனக்கு மிக தூணாக இருந்தது என் நண்பர்களும் மனைவியும் தான். அவர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு தான் நான் இவ்வளவு தூரம் வரக் காரணம்.
என் படத்தின் ட்ரைலரை வாழ்த்தியது கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்கள் தான். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் அனைவரும் வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி என்றார்.