‘சுழல் தி வோர்டெக்ஸ்’ ஸிற்காக சாம் சி. எஸ். இசையில் உருவான ‘துவா துவா’ பாடலின் வீடியோ வெளியீடு

அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ ஸிற்காக சாம் சி எஸ் இசையமைத்த ‘துவா துவா..’ எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ‘ராப்பர்’ அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் வெளியாகி, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பார்வையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ தமிழில் நேரடியாக உருவாக்கிய நீண்ட வடிவிலான திரைக்கதை மற்றும் அசல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் புலனாய்வு பாணியிலான நாடகத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, மேலும் பார்வையாளர்களை கவரவும் தயாராக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்த தொடருக்காக இசையமைக்கப்பட்ட ‘ துவா துவா..’ எனும் பாடலுடன் அதன் வீடியோவையும் வெளியிடுகிறது.‌

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்த இந்த பாடலை, பிரபல பின்னணி பாடகர்களான ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் பிரபலமான ராப் பாடகர் அறிவு ஆகியோரின் குரலில் தயாராகியிருக்கிறது.

இந்தப் பாடலில், இந்தத் தொடரில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உள கொந்தளிப்பை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன. மேலும் இந்தத் தொடரின் மையக்கருவை வலுப்படுத்தும் வகையிலும், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த பாடல் அமைந்திருக்கிறது. இந்த தொடரின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்தப்படும் செய்தியை ,மேலும் இசை மூலமாக மேம்படுத்தும் வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஜூன் 17ஆம் தேதியன்று ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசிக்கலாம்.

இந்தப் பாடலை பற்றி இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், ” சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை பார்த்தபிறகு இதில் இடம்பெறும் பாடல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என எனக்குத் தெரியும். தொடர் முழுவதும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மூலம் அனுபவிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல் அமைய வேண்டும் என நினைத்தேன். மேலும் இந்த தொடரின் ஆன்மாவை ‘துவா துவா’ என்ற பாடல் மூலம் கைப்பற்ற முடிந்தது.” என்றார்.

பாடகி ஜோனிடா காந்தி பேசுகையில், ” சுழல் தி வோர்டெக்ஸ் தொடரில் பங்களித்ததால் உற்சாகமாக இருக்கிறேன். இது புலனாய்வு சார்ந்த கிரைம் திரில்லர் தொடர் மட்டுமல்ல, இசை மற்றும் ஒளிப்பதிவும் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும் தொடர். ‘துவா துவா’ பாடல் சில சுவராசியமான திருப்பங்களையும் கொண்டிருக்கிறது. சாம் சி எஸ், அறிவு, ஆண்ட்ரியா உள்ளிட்ட திறமையான குழுவினருடன் இணைந்து மியூசிக் வீடியோவில் பணி புரிந்ததும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. வீடியோவில் நாங்கள் பணியாற்றியதை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

ஆண்ட்ரியா பேசுகையில், ” சாம் சி எஸ் ஜோனிடா, அறிவு ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவேன் என கனவிலும் நினைத்ததில்லை. இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. இவர்கள் அனைவரும் ஒரு முகமான மனதுடன் கவனம் செலுத்தி பாடலை உருவாக்கியிருப்பது ஊக்கமளிக்கிறது. ‘துவா துவா..’ பாடலில் பணியாற்றியதை நான் மிகவும் விரும்பினேன். ஏனெனில் அந்த பாடல் வெளிப்படுத்தும் விசயம் சக்தி வாய்ந்தது. இந்த தொடரின் மையப் புள்ளியான கதைக்கருவை இந்தப் பாடல் மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.” என்றார்.

ராப் பாடகர் அறிவு பேசுகையில், ” சுழல் தொடரைப் போலவே துவா துவா என்ற பாடலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதுதான் அழகு. பாடல் வரிகள் மற்றும் இசையின் நம்பகத்தன்மையை பாடலின் தனித்துவத்தை எடுத்துரைக்கிறது. ஜோனிடா மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவும் சாம் சி எஸ் அவர்களின் இசை அமைப்பிற்கு இணைந்து பணியாற்றி இருக்கிறோம் என நான் நம்புகிறேன். ஆற்றலையும், சுழலையும் சம அளவில் வெளிப்படுத்தும் பாடல் மற்றும் அற்புதமான வீடியோவை பார்வையாளர்கள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *