அஜித் நடித்த “தீனா” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் A.R.முருகதாஸ். பின்பு, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி என அனைத்துப்படங்களும் மெகா ஹிட் தான். இதில், துப்பாக்கி திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
மேலும், அவ்வப்போது சில படங்களை தயாரித்தும் வந்தார் A.R.முருகதாஸ். ஆனால், ஸ்பைடர், சர்கார், தர்பார் என அனைத்துப் படங்களும் உச்ச நட்சத்திரங்கள் நடித்த படங்கள் என்பதால் வசூல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், விமர்சகர்கள் மத்தியில் இந்த 3 படங்களும் படுதோல்வி படங்களே.
அதுமட்டுமின்றி, கத்தி மற்றும் சர்கார் படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி A.R.முருகதாஸின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் தடையாக அமைந்தது.
சிம்புவுடன் ஒரு படம்;
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான “தர்பார்” திரைப்படம் A.R.முருகதாஸ் சினிமா வாழ்க்கைக்கு இறுதியாக கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்றே சொல்லலாம். ஆனால், அதை சரிவர பயன்படுத்துக்கொள்ளாத A.R.முருகதாஸ். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் இதுவரை ஒப்பந்தம் செய்யாமல் இருக்கிறார்.
ஆனால், இறுதினங்களாக சிம்பு மற்றும் A.R.முருகதாஸ் கூட்டணியில் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து விசாரித்துப் பார்த்ததில் அச்செய்தி போலி எனவும். சிம்பு கிட்டத்தட்ட அடுத்த 5 வருடங்களுக்கு கால்ஷீட் பிசியாக வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மீண்டும் களமிறங்குவாரா A.R.முருகதாஸ்?
தொடர் வெற்றிக்குப் பிறகு அனைத்து இயக்குனர்களும் சம்பளத்தை உயர்த்துவது வாடிக்கை தான். ஆனால், இவரோ ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர் என்று பெயர் எடுத்தவராச்சே.
அதனால் தான் தனக்கு சம்பளமாக ரூ.40 கோடி நிர்ணயித்துள்ளதாகவும். தற்போது, எந்தத் தயாரிப்பாளரும் முன் வராத நிலையில் ரூ.35 கோடிக்கு சம்பளத்தை குறைத்துள்ளார் A.R.முருகதாஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு படத்தின் பாதி பட்ஜெட்டை சம்பளமா கொடுத்துவிட்டு, ஹீரோவுக்கும் பாதி பட்ஜெட்டை கொடுத்திவிட்டால் எப்படி படம் எடுக்க முடியும்? என்பதனால் எந்தத்தயாரிப்பாளரும் இவரை வைத்து படம் தயாரிக்க முன் வருவதில்லை என்றும். A.R.முருகதாஸ் வைத்துள்ள கதைகள் அனைத்துமே 100 கோடி பட்ஜெட் கதைகள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படியான சூழலிலும் மாபெரும் பட்ஜெட் கதைகளையும் தன் வசம் வைத்திருந்தால் A.R.முருகதாஸ் மீண்டும் இயக்குனராக களமிறங்குவது கடினம் தான்.