இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் முதல் தமிழ் டார்க்-ஹூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் , 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யோகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது,
2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த இயற்கைக்கு மாறான அதேசமயம் மனதைக் கவரும் டார்க் ஹ்யூமர் திரில்லர் காலம் நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி அதிலிருந்து விடுபட போராடும் கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா ஆகிய நான்கு பள்ளி நண்பர்களின் சாகச வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது. சவால் மிகுந்த சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் வழி நெடுக தவிர்க்க முடியாத அடையாளங்களை விட்டு, செல்லும் வழியில் கேள்விக்குரிய தேர்வுகளை மேற்கொண்டு லாகவமாக கடந்து செல்லும் அவர்களின் இந்தப் பயணம் இறுதியாக எதிர்பாராத விதமாக தன்னைத் தானே அறிந்து உணரும் பாதைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது.
இந்தத் தொடரை தொகுத்து நிர்வகித்த கார்த்திக் சுப்பராஜ், கூறினார் “ஸ்னேக்ஸ் & லேடர்ஸ் இல் பணிபுரிந்ததில் நான் முழுமையான மகிழ்ச்சியை உணர்ந்தேன். மற்றும் இந்த செயல்திட்டத்தில் பிரைம் வீடியோவுடன் கூட்டிணைந்து பணிபுரிய கிடைத்த வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நான்கு நண்பர்களின் கதைக்கு உயிரூட்டிய அனுபவம் நம்பவே முடியாத அளவு உற்சாக்கத்தை அளித்தது. இந்தத் தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பதின்பருவ வயதினரின் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் தனித்துவம் மிக்க ஆளுமை மற்றும் சிக்கலான உறவுகளை வெளிப்படுத்துகிறது. அவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் மர்மத்தை விடுவிக்க முயற்ச்சிக்கும் அவர்களின் இந்தப் பயணம் பார்வையாளர்களை தொடக்கத்திலிருந்து இறுதி வரை கவர்ந்திழுத்து கட்டிப்போடும்நட்பின் உணர்வு பூர்வமான நுணுக்கங்கள், தனிநபர் வளர்ச்சி மற்றும் பார்வையாளர்காலோடு ஒத்திசைந்து எதிரொலிக்கும் அர்த்தமுள்ள உணர்ச்சிப் பிணைப்புகள் மற்றும் பாடங்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை தூண்டுவதோடு பொழுதுபோக்காகவும் இருக்கக் கூடிய ஒரு கதையை உருவாக்குவதை எங்கள் கிரியிலாக்காக்க் கொண்டிருந்தோம். . பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத் தொடர் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்”.