மற்ற சினிமா துறையை விட தமிழ் சின்னமாவில் வயது பாராமல் ஜோடி போட்டு நடிக்கும் வழக்கம் எப்பொழுதும் உண்டு சமீபத்தில் தர்பார், அண்ணாத்த என இரண்டு படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. தர்பாரில் ரஜினியை விட நயன்தாரா இளையவர் என வெளிப்படை வசனங்கள் இருந்ததால் ரசிகர் மத்தியில் பரபரப்பு இல்லை.
ஆனால் அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா என 90ஸ் கிட்ஸ் ஹீரோயின்களை முறை பெண்களாக வைத்துவிட்டு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவை நிறுத்தியது அவரின் வயது ஏறியது போல் ரசிகர்களுக்கு தோன்றியது, அது குறித்து பரவலாகவும் பேசப்பட்டது.
தற்போது பிரபல நடிகையாக வளம் வருபவர் ஸ்ருதிஹாசன் .இவர் நடிப்பில் கடைசியாக லாபம் திரைப்படம் வெளியானது . தற்போது பிரபாஸ் உடன் இனைந்து சலாம் படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தையடுத்து தெலுங்கு நடிகர் பாலக்ரிஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கோபிசந்த் மாலினினி இயக்கும் இந்த படத்தில் முதற்கட்டப்பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் . கோபிசந்த் மாலினினி இயக்கத்தில் வெளியான க்ராக் படத்தில் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
பாலக்ரிஷ்ணாவுடன் ஜோடியாக இணையும் ஸ்ருதி ஹாசன் பற்றி மக்களின் கருத்திற்காக படம் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்.