சந்தானம் நடிப்பில், லாபிரிந் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் படம் “AGENT கண்ணாயிரம்”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் மனோஜ் பீதா இயக்கியுள்ளார்.
AGENT கண்ணாயிரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில், சந்தானம், ரியா சுமன்,ராமதாஸ், புகழ், மனோஜ் பீதா கலந்துக் கொண்டனர்.
அப்போது, சந்தானத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
ஆந்திராவில் வாரிசு படத்திற்கு முன்னுரிமை கொடுக்காதது பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த சந்தானம்.
தமிழ் படங்கள் வெளியாகும் போது நம் படங்களுக்குதான் நாம் முக்கியத்துவம் கொடுப்போம். அதுப்போல தாய் மொழிப் படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மேலும், மொழி எந்தத்தடையும் இல்லை எந்தப் படம் நன்றாக உள்ளதோ அந்தப் படம் ஓடும். எனவே, வாரிசு படத்திற்கு முன்னுரிமை கொடுத்தது பெரிய விஷயம் இல்லை என்று பதிலளித்தார்.
அதுமட்டுமின்றி, இது குறித்து நாம் ஏதும் பேச முடியாது. வாரிசு படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு தயாரிப்பாளர் தான். அதனால் அவர் அதை பார்த்துக் கொள்வார்.