வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக அஜித், வினோத், போனி கபூர் இணையவுள்ளனர். இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதற்கான போஸ்ட்டரையும் போனி கபூர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இருப்பினும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. ஏற்கனவே, வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களையும், பின்னனி இசையை ஜிப்ரான் இசையமைத்தது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் மார்ச் மாதம் AK61 படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும், இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவலால் வருகின்றன.
இந்நிலையில் தற்போது AK61 படம்பற்றி இயக்குனர் வினோத் பேசியதாவது, இப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். மங்காத்தா படத்திலும் அஜித் இதேபோன்று ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
அதேபோல இப்படத்திலும் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் கவின் நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.