அடுத்த 6 வாரங்களுக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் 6 படங்கள்;

கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து பல வெற்றிப் படங்களை வெளியிட்டு வருகிறது, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம். வெளியாகும் அனைத்துப் படங்களையும் ஆட்சி மாற்றத்தால் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீண்டும் தலைதூக்கியாடுகிறது என்று பலர் குற்றம் சாட்டியிருந்தாலும், நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

மேலும், அந்த குற்றச்சாட்டை பற்றி விசாரித்தால், தயாரிப்பாளர்களாக தானாக முன்வந்து ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் விநியோகம் செய்ய விரும்புகிறார்கள் என்றும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கணக்கு சரியாக உள்ளது என்றும், வெறும் 10 சதவீத ஷேர் மட்டுமே அவர்கள் எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தை சரியான நேரத்தில் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் என்றும் பல தயாரிப்பாளர்கள் புகழாரம் செய்தார்கள்.

இந்நிலையில், அடுத்த 6 வாரங்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் படங்களின் பட்டியல்:

ஆகஸ்ட் – 11 – லால் சிங் சத்தா (அமீர் கான்)
ஆகஸ்ட் – 18 – திருச்சிற்றம்பலம் (தனுஷ்)
ஆகஸ்ட் – 26 – டைரி (அருள்நிதி)
ஆகஸ்ட் – 31 – கோப்ரா (விக்ரம்)
செப்டம்பர் – 8 – கேப்டன் (ஆர்யா)
செப்டெம்பர் – 15 – வெந்து தணிந்தது காடு (சிம்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *