ஜி.வி.பிரகாஷ், மமிதா பைஜூ, ஆதித்யா பாஸ்கர், சுப்ரமணிய சிவா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “ரெபெல்”. இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் துணை இயக்குனரான நிகேஷ் இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
கதைப்படி,
80களில் கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் படிக்கச் செல்லும் போது அங்குள்ள மலையாளிகளுக்கு, தமிழர்களுக்கும் இடையே நடக்கும் காலேஜ் அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம்.
கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் புரட்சிகரமான கல்லூரி மாணவராக அசத்தியுள்ளார். கதாநாயகி மமிதா பைஜூ அழகாவும் போதுமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பர்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார் இயக்குனர் நிகேஷ்.
படத்தின் முதல் பாதியை மிக யதார்த்தமாக சிறப்பாக இயக்கியுள்ளர் நிகேஷ். ஆனால், படத்தின் இரண்டாம் பாதி சற்று சினிமா பாணியிலும், தொய்வாகவும் இருந்தது கதை வலுவை இழக்க செய்துவிட்டது. இருப்பினும் இளம் வயதில் இப்படி பட்ட ஒரு அரசியலை கையாண்ட விதம் சிறப்பு.