காலாவில் ஆரம்பித்து அண்ணாத்த வரை தொடர் தோல்விப் படங்களை வழங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது, ஜெயிலர் திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். ஆகஸ்ட் 18 அல்லது 22ம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் அறிவிப்பில்லாத டெல்லி பயணம் சென்று பல அரசியல் பெருந்தலைகளை சந்தித்தார் ரஜினி.
டெல்லி பயணம்:
தமிழ் நாட்டிலுள்ள அரசியலால் ரஜினிக்கு எந்த ஒரு பயனும் இல்லை. காரணம், அவருக்கு மண்டபத்தையும் வீட்டையும் தவிர பெரிதாக தமிழகத்தில் வேறு எந்த அசையா சொத்துக்களும் இல்லை. கொரோனா காலத்தில், அந்த மண்டபத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேட்டபோதும் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது என்று கூறிவிட்டார்.
அதன் பின், அரசியலில் கால் வைக்க நினைத்தால், கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி இருப்பது போல் அவ்வளவு சிக்கல்கள் உள்ளது என்பதை அறிந்து ஒதுங்கிவிட்டார் ரஜினி.
மேலும், கர்நாடகாவில் பள்ளிக் கூடங்கள் கட்டியும், பல தொழில்களையும் செய்து வருகிறார் ரஜினி. மேலும், தனது சுயலாபத்திற்காக ஒன்றிய அரசின் உதவியை நாட்டம் காண டெல்லி புறப்பட்டார் ரஜினி.
அப்போது, ரஜினியை மூளைச்சலவை செய்து 2024 தேர்தலில் ரஜினியின் ஆதரவை பா.ஜ.க வுக்கு பெறவேண்டும் என்பதே பா.ஜ.க-வின் சித்தாந்தம்.
ஆளுநர் சந்திப்பு:
பா.ஜ.க தலைமை ரஜினியிடம் நேரடியாக டெல்லிக்கு வரக்கூடாது. தூதர் ஆர்.என்.ரவியிடம் கடிதம் கொடுங்கள் அல்லது விஷயத்தை தெரிவித்து விடுங்கள் என ஒன்றியத்தின் தலைமை கூற, அதை கேட்டு தான் ஆளுநரை சந்தித்துள்ளதாக ஒரு தரப்பில் செய்தி வெளியாகிறது.
ஆனால், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அன்று தான் அமலாக்கம் செய்தது. அச்செய்தியை மீடியாக்களிடமிருந்து பூசி மொழுகத் தான் ரஜினி மற்றும் ஆளுநரின் சந்திப்பை ஒரு நாடகமாக ஒன்றியம் அமைத்தது என்று பலதரப்பு விவாதங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் லாபத்திற்காக ரஜினி ஆளுநரை சந்தித்தாரா? இல்லை சுயலாபத்திற்காக ஒன்றியத்தை நாடினாரா? என்று விசாரித்ததில், ரஜினி சொந்தமாக ஒரு பள்ளி தொடங்கவுள்ளார். அதற்காக தான் இது அனைத்தையும் செய்து வருகிறார் என்று தகவலைகள் கிடைத்துள்ளது.
மேலும், கோலிவுட் முன்னணி நடிகர்கள் யாரும் தங்கள் ட்விட்டர் டி.பி-யில் தேசியக் கோடியை வைக்காத நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கோடியை பதிவு செய்து சந்தேகத்தை அதிகரித்துள்ளார் ரஜினி. இவரைத் தொடர்ந்து இவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தும் ட்விட்டரில் தேசியக் கோடியை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக, பாலிவுட்டின் சிறந்த நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்து சினிமாவில் தன் மார்க்கெட் இழந்து 90 கோடி பட்ஜெட் படத்தில் வெறும் 3 கோடி வசூலை மட்டுமே பெற்றார் என்பது பலரும் அறிந்ததே.
150 கோடிக்கு மேல் பட்ஜெட் படங்களில் நடிக்கும் ரஜினியின் நிலைமையும், தயாரிப்பாளர்களின் நிலைமையும் என்ன ஆகுமோ என்பது கேள்விக்குறியே!