தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் வளர்ந்து தற்போது தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்த வசூலை குவித்து வருகிறது அந்த வகையில். டான் உள்ளிட்ட பிரமாண்ட வெற்றி திரைப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.
இப்படத்தை தெலுங்கு ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தற்போது திரைப்படத்தை பார்த்துவிட்டு அவரின் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி, பிரின்ஸ் திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே காமெடி என்றும். விழுந்து விழுந்து சிரித்தேன் என்றும். அவர் கூறியதாக இப்போது தகவல் பரவி வருகிறது.