தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்து 100+ கோடிக்கு மேல் வசூல் செய்த படம் ராட்சசன் மற்றும் அசுரன் இந்த இரு படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அம்மு அபிராமி. மேலும் துப்பாக்கி முனை படத்திலும் நன்றாக நடித்திருப்பார்.
இந்த மூன்று படங்களிலும் அவரின் கதாபாத்திரம் ஏதோ ஒரு வகையில் இறந்துபோகும்.
இவர் தெலுங்கு மொழியில் FCUK படத்தில் தமிழ் படத்தின் பிரபலவில்லன் ஜெகபதி பாபுவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தமிழக மக்கள் அம்மு அபிராமியை இவர் நடிக்கும் படங்களில் அவரின் கதாபாத்திரம் இறந்து விடும் என்று நகைச்சுவையாக பேசிவந்தனர். அவருக்கு முழுநீள கதாபாத்திரம் கிடைத்தால் அவரின் திறமை மேலும் வெளிப்படும் என்றும் இவர் தமிழ் சினிமாவில் பெரும் பங்களிக்க போகிறார் எனவும் பேசி வந்தனர்.
ஆனால் தற்போதோ தலைகீழ், காரணம் என்ன?
விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நகைச்சுவை கலந்த ரியாலிட்டி ஷோ ‘குக் வித் கோமாளி’ இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
இரண்டாவது சீசனில் பிரபலமானவர்கள் தான் அஸ்வின் மற்றும் பவித்ர லட்சுமி, தற்போது மூன்றாவது சீசன் ஆரம்பித்த நிலையில் அம்மு அபிராமியும் முக்கிய போட்டியாளராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் அம்மு அபிராமியை மக்கள் விரும்பி பார்த்தாலும் தற்சமயம் அவருக்கு மிகுந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால்,
அவர் பிற போட்டியாளர்களிடமும் கோமாளிகளிடமும் மரியாதை குறைவாக பேசுவது தான் காரணம். அங்குள்ள அனைவரையும் வயது வரம்பு பார்க்காமல் ‘போடா போடி’ என்றும் ‘நீ’ ‘வா’ ‘போ’ என்றும் பேசிவருகிறார். இது மக்கள் சிறிது முகம் சுழிக்கும் வகையறா.
இணையத்தில் இவர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அவர்களை ‘ஏ போடி’ என சொல்லும் வீடியோ வைரல் ஆனது. அந்த விடீயோவின் கமெண்ட்களில். மக்களின் எதிர்ப்பை கீழ் இணைக்க பட்டுள்ள போட்டோக்களில்
அந்த கமெண்ட்களில் ‘அம்மு அபிராமி மரியாதை தெரியாதவர் அவரை உடனே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றவேண்டும்’.
‘அவருக்கு இனிமேல் எந்த பட வாய்ப்பும் வர கூடாது’.
‘நாங்கள் பார்த்த 3 சீசனில் அம்மு அபிராமி தான் எரிச்சலான ஒரு கேரக்டர், இவருக்கு வனிதாவே மேல்’ என சரமாரியாக திட்டித்தீர்க்கின்றனர்.
மக்களின் எதிர்ப்புக்கு ஏற்றவாறு நெட்டிசன்களும் பாய்கின்றன.
இவர் மக்களின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் அம்மு அபிராமி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்று தான் ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.