நானும் ஒரு அழகி விமர்சனம்;

கே சி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மதிபாலன் ஒளிப்பதிவில், பொழிக்கரையான் இசையில், மோகனா மற்றும் அருண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “நானும் ஒரு அழகி”.

கதைப்படி,

சேரன்மாதேவியில் வேலையில்லா பட்டதாரி இளைஞனான நாயகன் அருணும் அவரது முறை பெண்ணான நாயகி மேக்னாவும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் அருண் வேலைக்காக சென்னை சென்ற நேரத்தில் மேக்னாவுக்கு ராஜதுரை என்பவருடன் திடீர் திருமணம் நடைபெறுகிறது.

திருமணம் ஆகி 5 வருடமாகியும் குழந்தை இல்லாததால் ‘மலடி’ என பட்டம் சூட்டி மேக்னாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் கணவர். கண்ணீருடன் சொந்த ஊருக்கு திரும்பி தாயாருடன் வாழ்ந்து வரும் மேக்னா திடீரென கர்ப்பமாகிறார்.

இதைத்தொடர்ந்து ஒருபுறம் மேக்னாவை கிராமத்து பெண்கள் அவமானப்படுத்துவது, இன்னொருபுறம் கணவனால் கொலை முயற்சிக்கு ஆளாவது என பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார் மேக்னா.

இறுதியில் மேக்னா அவமானத்தில் எப்படி மீண்டார்? பிரச்சனையில் இருந்து தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அருண், வேலையில்லா பட்டதாரி ஆக கிராமப்புற மாணவ- மாணவிகளுக்கு கல்வி சேவை செய்வதுடன் மேக்னாவை ஒருதலையாக காதலித்து அந்தக் காதல் கைகூடாமல் போக கதறி அழும் காட்சியில் கவனம் பெற்றிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மேக்னா, தனக்கேற்பட்ட நிலை எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என பெண் உரிமைக்காக போராடும் காட்சிகளில் நிஜ போராளியாகவே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பெண் அடிமைத்தனத்தை தட்டிக் கேட்கும் வீர பெண்ணின் கதையை சமூகத்துக்கு விழிப்புணர்வு படமாக கொண்டு வந்துள்ளார் இயக்குனர் பொழிக்கரையான். ஒவ்வொரு ஊரிலும் வெளியே தெரியாமல் பெண்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் பற்றிய கதை தான் நானும் ஒரு அழகி. சமூகத்தில் கணவன் என்ற போர்வையில் கொடூர மிருகமாக வாழும் சில ஆண்களுக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால் படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

பாடல்கள் ஓகே ரகம், படத்தில் DI வேலையை சற்று கவனித்திருக்கலாம், ஒளிப்பதிவில் நிச்சயம் தேர்ச்சி வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *