விஷாலிடம் எனக்கு பிடித்த விஷயம் இது தான் – ஹரிகிருஷ்ணன்

சந்தித்த மனிதர்களில் இனிமையானவர்கள் இந்த வாரம்
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கிணைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

உங்கள் பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் சொல்லுங்க…?

நான் சென்னை கோடம்பாக்கத்தில் மிகவும் ஏழ்மையான சராசரி குடும்பத்தில் பிறந்தவன். திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான். எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

உங்கள் படிப்பு ஆரம்ப காலகட்டத்தில் உங்கள் பணி….?

BBA முடித்துவிட்டு ஆரம்பகாலத்தில் சிறு சம்பளத்தில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்ற தொடங்கினேன். அக்கம்பெனியில் சிறப்புடன் பணியாற்றியதில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளும் கிடைத்தது. அக்கம்பெனியில் பொது மேலாளர் நிர்வாகத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டேன்.

உங்களுக்கு சமூகத்தின்மேல் அக்கறையும் உதவி செய்யும் எண்ணமும் வர காரணம்….?

சார் என்னை பொறுத்தவரை வறுமை என்றால் என்ன என்பதை அடிப்படையில் உணர்ந்தவன் அதனால் வறுமையிள் உள்ளவர்களின் மனதை நான் அறிவேன். எனவே, வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்தவரை உதவி செய்யவேண்டும் என்ற நோக்கம் கொண்டவன். அதனால் என்னால் முடிந்த சிறிய உதவிகளை செய்துவருகிறேன். அதனை தொடந்து என் நண்பர்களுடனும் சேர்ந்து ஏழை எளியோர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

நடிகர் விஷால் அவர்களுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது சினிமாவில் உங்களுக்கு ஏதாவது ஆர்வம் இருக்கா….?

சினிமா வாய்ப்பு நான் தேடியதும் இல்லை, நடிகர் விஷால் அண்ணன் அவர்களின் உண்மையான நேர்கொண்ட பார்வை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் பயணிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் கொடுக்கும் பணிகளை உண்மையாகவும் நேர்மையாகவும் சிறப்புடன் செய்ததால் என்னை அண்ணன் அவருடைய செயலாளராக நியமித்தார்.

அதில் இருந்து நடிகர் விஷால் அண்ணன் அவர்களின் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியும் எங்கள் அன்புமிக்க ரசிகர்களை கொண்டு பல நற்பணிகளை செய்துவந்தோம். பின்பு நற்பணி இயக்கம்நாளடைவில் விஷால் அண்ணன் அவர்களின் மக்கள் நல இயக்கம் என மாற்றி மக்களுக்கு பல நல திட்ட உதவிகளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

நடிகர் விஷால் தேவி அறகட்டளை தொடங்க நோக்கம் அதில் உங்கள் பங்களிப்பு என்ன….?

விஷால் அவர்கள் சமூக சிந்தனையுடன் மக்களுக்கு உதவும் வகையில் தேவி அறகட்டளை ஆரம்பித்து எண்ணற்ற பல மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியும், பல மாணவ, மாணவிகளை தத்து எடுத்து படிக்கவைப்பதுடன், பல விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார் இப்படி நேர்கொண்ட பார்வையில் உண்மையுடன் நேர்மையுடன் மக்களுக்கு உதவும் மனிதநேயம் கொண்ட அண்ணன் விஷால் அவர்களுடனும் தேவி அறகட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்து பணியாற்றுவது மன நிறைவாக இருக்கிறது.

நடிகர் விஷால் அவர்களுக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் அல்லது உங்களுக்கு ஏதேனும் எண்ணம் இருக்கிறதா…?

விஷால் அண்ணனை பொறுத்தவரை அவர் பயணிக்கும் சினிமா துறையாக இருந்தாலும், நிஜ நாயகனாக இந்த சமூகத்திற்கு எதாவது நல்லது பண்ணவேண்டும் என்று துடிக்கும் இளைஞர். அவரைபொறுத்தவரை யாராவது கஷ்டம் படுகிறார் என்று கேள்விபட்டால் உடனே கை கொடுத்து உதவும் மனம் கொண்டவர், விஷால் அண்ணன் அவருடைய தேவைக்களுக்காக பட்ட கஷ்டங்களை விட, பொது பிரச்சனைகளுக்காக பட்ட கஷ்டங்களால் தான் அதிகம். உதாரணம் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் நடிகர் சங்க கட்டிடம் கட்டவேண்டும் என்று பாண்டவர் அணியாக அவதரித்து போராடிக்கொண்டு இருப்பவர், மற்றும் திரையுலகை ஒழுங்கு முறை படுத்தவேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளரகள் சங்கத்திலும் நம்ம அணியாக உருவெடுத்தும் அதுமட்டும் அல்லது RK.நகர் இடைதேர்தலில் போடியிடவும் தயங்காமல் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர், விவசாயி நண்பர்களுக்குகாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பசுமை திர்ப்பாயத்தில் வழக்கு தொடந்தார் இதனால் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இன்னல்களுக்கு தள்ளப்பட்டார். இப்படி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் நல்ல மனிதர். அவர் அரசியலுக்கு வரும் சூழ்நிலையை அமைந்து கடவுளும் வழி காட்டினால் நல்லதுதான்.

உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள்

எனக்கு புரட்சி தலைவர் MGR பிடிக்கும். அவர் வழியில் வந்த சிங்கபெண் புரட்சிதலைவி மாண்புமிகு அம்மா அவர்களையும் பிடிக்கும்

நடிகர் விஷால் அவர்களிடத்தில் உங்களுக்கு பிடித்ததும், பிடிக்காததும்

எல்லோருக்கும் உதவி செய்யும் பண்பு, ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார். கார்ல போயிட்டு இருக்கும்போது சாலை ஓரத்தில் இருக்கும் முதாட்டி ஒருவர் பணியாரம் வித்துக்கொண்டு இருந்தங்கா. அதை பார்த்த விஷால் அண்ணன் உடனே அவர்கையில் எவ்வளவு பணமாக இருந்தாலும் அதை கொடுத்து வாங்கி வர சொல்லுவார். இப்படி வறுமைக்கு உட்பட்ட சூழ்நிலையில் விற்கும் மக்களுக்கு முகம் அறியாமல் உதவி செய்வார். அதுமட்டும் அல்ல. எதாவது கால்நடைகள் அடிப்பட்டால் கூட அத safe –ஆ வழிவகை செய்வார், வர்தா புயலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கால்நடை (நாய்) அதை பாதுகாத்து இன்று எங்கள் அலுவலகத்தில் ரோமியோ என்ற பெயருடன் இராஜாவாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. பிடிக்காதது என்று எதுவும் சொல்லமுடியாது, சொல்லனும்னு சொன்ன அவர் எல்லாரையும் நம்புவது.

கடைசியாக நீங்கள் சொல்ல விரும்புவது

என்னை பொறுத்தவரை நாம் செய்யும் வேலைகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உண்மையுடனும், நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும். நம்மால் முடிந்த உதவிகள் சிறியதாக இருந்தாலும் அது அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும். பிறப்பது ஒருமுறை இறப்பது ஒருமுறை இதற்கு இடைப்பட்டு வாழும் வாழ்க்கையில் அனைவரிடத்திலும் அன்பை விதைப்போம். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். – ஹரிகிருஷ்ணன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *