பிறந்த நாள் காணும் லோகேஷ் கனகராஜ் – சரியாக 12 மணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலம்; ரசிகர்கள் உற்சாகம்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பின்பு கார்த்தி நடித்த கைதி படத்தை தளபதி விஜய் நடித்த பிகில் படத்துண்டன் 2019ம் ஆண்டு தீவாளி அன்று மோதி வெற்றியடைந்து 100 கோடிக்கு மேல் வசூலும் செய்தது.

பின்பு சென்ற ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படமும் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன், பாஹத் பாசில், விஜய் சேதுபதி இனைந்து நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று. மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது என்று கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். மேலும் இன்று காலை விக்ரம் படம் ஜூன் மாதம் 3ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும், விக்ரம் படத்தின் மேக்கிங் விடியோவும் வெளியிட்டது படக்குழு.

https://youtu.be/jJf35tEkW9E

இதனை தொடர்ந்து, இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இரவு 12 மணிக்கு உலக நாயகன் ‘கமல் ஹாசன்’ தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த பதிவில், ‘என்னுடைய ரசிகனாக இருந்து இயக்குனராக வளர்ந்து சகோதரராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் ‘கமல் ஹாசன்‘ சரியாக 12 மணிக்கு ஒரு சிலருக்கு மட்டுமே வாழ்த்து தெரிவிப்பார். அப்படி பட்ட ஒரு நம்பிக்கையையும், இடத்தையும் பெற்றிருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர்.

விரைவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து ‘கைதி 2’ படத்தை துவங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *