கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம் (2.5/5)

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, மற்றும் பலருடன் கே எஸ் ரவிக்குமார் நடித்து தயாரித்திருக்கும் படம் “கூகுள் குட்டப்பா”. மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ திரைப்படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்று சபரி மற்றும் சரவணன் இயக்கியுள்ளனர்.

கதைப்படி,
கோவை மாவட்டத்தில் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருடன் வாழ்ந்து வருகிறார் தர்ஷன். இவர் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால், தந்தை கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷனின் ஆசைக்கு தடை போடுகிறார். ஒருவழியாக தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார் தர்ஷன்.

மேலும், தனிமையில் இருக்கும் தந்தையை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார். பிறகு மகன் தர்ஷன் என்ன ஆனார்? ரோபோ கடைசி வரை அவருடன் இருந்ததா என்பது மீதிக் கதை.

கேஎஸ் ரவிக்குமார், முழு கதையும் தன் தோளில் தாங்கி நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் குறை சொல்லாத அளவிற்கு தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

தர்ஷன் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

லாஸ்லியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி பெரியதாக எடுபடவில்லை.

ஜிப்ரானின் இசை படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசை ரசிக்க வைத்திருக்கிறார். அர்வியின் ஒளிப்பதிவு சிறப்பு.

கூகுள் குட்டப்பா – குழந்தைகளுக்கு ஓகேப்பா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *