சரத்குமார் ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து சண்டியராக வலம் வந்து கொண்டிக்கிறார். தாய் தந்தையை சிறுவயதில் இழந்த சண்முக பாண்டியனை தன்னுடைய அரவணைப்பில் வளர்க்கிறார் சரத்குமார்.
ஆனால், சரத்குமார் சண்முக பாண்டியனை மருமகன் என்றும் சண்முக பாண்டியன் சரத்குமாரை மாமா என்றும் அழைக்கிறார்கள். இவ்வாறு இவர்களது உறவு வளர்கிறது. சரத்குமாருக்கு ஒன்று என்றால் உடனே முன்வந்து சண்டை செய்கிறார் சண்முக பாண்டியன்.
தண்ணீர் இல்லாத போது மலைப்பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்கள் பெரும்பாலும் அணைப்பகுதியில் நீர் இருப்பதால் இவர்களால் விவசாயம் செய்ய இயலாமல் போகிறது. இதனால் கஞ்சா செடிகளை விற்று தனது வாழ்வாதாரத்தை பார்த்து வருகின்றனர் சரத்குமாரும் சண்முக பாண்டியனும்.
போலீஸ் உயர் அதிகாரி சுஜித் சங்கர் இவர்களின் இந்த கஞ்சா தொழிலை முற்றிலுமாக அழிக்க களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை என்னவானது என்பதை படத்தின் மீதி கதை…
மலை போல ஆறடி உயரத்தில் வந்து தனது நடிப்பை அசுரத்தனமாக கொடுத்திருக்கிறார் நாயகன் சண்முக பாண்டியன். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது தந்தை விஜயகாந்த் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்துவிட்டார்.
அதே போல், ஆக்சன் காட்சிகளிலும் மெனக்கடலை கொடுத்து மிரட்டலாக தனது நடிப்பை கொடுத்து விட்டார் சண்முக பாண்டியன். இவரைத் தொடர்ந்து சரத்குமார் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார். படம் முழுவதுமே நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரமாக வந்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் சரத்குமார். இப்படியான சரத்குமாரை பார்த்து நீண்ட நாள் ஆகிறது என்று தோன்ற வைத்திருக்கிறார்.
கதாநாயகியாக தாரணிகா சுருதி அழகாக இருந்தாலும் நடிப்பில் என்னும் சற்றும் கவனம் தேவை.
வில்லனாக சுஜித் சங்கர் வழக்கமான தனது உடல் மொழியை பயன்படுத்தி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் மட்டுமே படத்தில் பெரிய பலமே தவிர, மற்ற காட்சிகளையும் ரசிக்கும் படியாக கொடுக்க இயக்குனர் தவறி விட்டார்.
ஒரு சில காமெடி காட்சிகளை தவிர மற்ற காட்சிகளை கவனத்துடன் எடுத்திருக்கலாம் இயக்குனர் பொன் ராம். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், படத்திற்கு பெரும் பலம் தான்.
பின்னணி இசையை அடித்து நொறுக்கி இருக்கிறார். இரைச்சல் தான் அதிகம். ஒளிப்பதிவு நன்றாகவே ஒளித்திருக்கிறது. படத்தொகுப்பும் கூர்மையாக இருந்தது படத்திற்கு பெரிய பலம்.
மேலும், படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களான காளி வெங்கட், ஜார்ஜ் மரியம், முனீஸ் காந்த் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது. கல்கி ராஜாவின் காமெடி ஒரு சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
பொன்ராமின் இயக்கத்தில் உருவான கொம்பு சீவி படத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், தாரணிகா ஸ்ருதி, சுஜித் சங்கர், முனீஸ் காந்த், கல்கி ராஜா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியம், பிரபாகர், ராமச்சந்திரன், இந்துமதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம் மற்றும் படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ்.
தயாரித்திருக்கிறார் முகேஷ் டி செல்லையா.
கொம்பு சீவி – பட்டை தீட்டியிருக்கலாம்

