ஆகாஷ் பிரேம் குமார், எனாக்ஷி, புகழ், மைம் கோபி, VJ ஆஷிக், சாம்ஸ், பிரியங்கா, அணு, மிதுன்யா, நிசார், ஸ்வப்னா, க்ரித்திகா நடிப்பில், RKV இயக்கத்தில் S கியூப் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் E மோகன் தயாரித்துள்ள படம் “கடைசி காதல் கதை”.
கதைப்படி,
ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் “PLATONIC LOVE” செய்தால் இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்கின்றனர்.
PLATONIC LOVE என்றால் என்ன?
எளிமையாக சொன்னால், தொடாமல் காதலிப்பது.
அப்படியான காதலை இருவரும் செய்ய, உடன் இருந்த நண்பர்பர்கள் உசுப்பேத்திவிட்டதனால். ஹீரோயினிடம் முத்தம் கேட்கிறார் ஹீரோ. தொடர்நது இதே போல், டார்ச்சர் செய்வதால் ஹீரோவை பிரேக் அப் செய்கிறார் ஹீரோயின்.
காதல் தோல்வியால் மனநிலை பாதிப்புக்கு ஆளாகிறார் ஹீரோ. பின்பு ஒரு மன நல மருத்துவரின் அறிவுரை படி பல புத்தகங்களை படிக்கும் ஹீரோ, காதலுக்கும் காதல் தோல்விக்கும் ஒரு வினோதமான தீர்வை கண்டறிகிறார்.
அது என்ன தீர்வு என கேட்டால், ஆண்களுக்கு பெண்களின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக இருப்பது உடை தான். எனவே, ஆதாம் ஏவாள் போல் உடையணியாமல் வாழ்ந்தால் தான் ஒருவர் மேல் ஈர்ப்பும் காதலும் வாராது என்று கூறுகிறார் ஹீரோ.
ஆனால் இவரின் முடிவுக்கு முதலில் சிக்கிக் கொள்வது புகழ் தான். அடுத்ததாக ஹீராவின் நண்பர்களும், நண்பர்களின் காதலிகளும் என்ன ஆனார்கள்? முடிவை மாற்றிக்கொண்டாரா ஹீரோ? என்பது படத்தின் மீதிக்கதை…
படத்தில் நடித்த அனைவரும் புதுமுக நடிகர்கள் என்பதால் நடிப்பில் கூடுதல் கவனம் தேவை. மற்றபடி கதைக்கு தேவையான இடத்தில் அனைவருமே ஸ்கொர் செய்துள்ளனர்.
இக்கட்டான ஒரு கதைக்கு அழகான அர்த்தமுள்ள ஒரு க்ளைமாக்ஸை கொடுத்துள்ளார் இயக்குனர் RKV. படத்தின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதியில் காமெடி அதிகம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காமெடி படம் பார்த்த ஒரு அனுபவம் இப்படத்தில் கிடைக்கும்.
கடைசி காதல் கதை – காதலுக்கு எது சார் END?