ரஜினியை டார்கெட் செய்யும் அட்லீ? படப்பிடிப்பு தளத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்ஸ் மீட்டிங்;

ராஜா ராணி, தேறி, மெர்சல் என ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனிக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் அட்லீ. ஆனாலும், மௌன ராகம், சத்ரிதான், அபூர்வ சகோதரர்கள் கதையை தான் இவர் மாடர்ன் ரீமேக் செய்துள்ளார் என்ற கடுமையான விமர்சனங்களுக்கும் பெயர் போனவர் அட்லீ. என்னதான் ரீமேக் செய்தாலும் படங்கள் என்னவோ மிகப் பெரும் ஹிட் தான். அதனால் தான், விமர்சனங்களை கண்டுகொள்ளாத இவர் “ஷாருக்கான்” நடிப்பில் வெளியான “சக் தே இந்தியா” திரைப்படத்தை விஜய்யை வைத்து அதிகமான பொருட்செலவில் ரீமேக் செய்து “பிகில்” படத்தை இயக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கினார்.

திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை எதற்காக நடிகர் ஷாருக்கான் படத்தை ரீமேக் செய்தோம். ஷாருக்கானையே இயக்கிவிடுவோம் என்று பாலிவுட்டில் தற்போது கால் பதித்துள்ளார் இயக்குனர் அட்லீ.

தற்போது,

பாலிவுட் திரை உலகில் உட்ச நட்சத்திரமாக ஜோளித்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாரூக்கான். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஜவான் படத்தில் இரட்டைவேடங்களில் நடித்து வரும் ஷாருக்கான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில் ஜவான் திரைப்பட படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் அதே ஸ்டுடியோவில். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. அதனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தீடிரென்று நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜவான் திரைப்படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் உலா வந்தவண்ணம் உள்ளது.

இந்த சந்திப்பிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த தகவல் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இச்செய்தியை அறிந்த பலரும், அட்லீயின் அடுத்த ஸ்கெட்ச் சூப்பர் ஸ்டாருக்கா? என்று ஒருதரப்பு மிகுந்த எதிர்பருப்புடனும், மற்றொரு தரப்பு அச்சத்துடனும் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *