மக்களின் விமர்சனங்களை ஏற்று “இந்தியன் 2” படக்குழு செய்த செயல்;

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், மிகுந்த வரவேற்புடன் வெளியான படம் “இந்தியன் 2”. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்திருந்தது லைகா நிறுவனம்.

எஸ்.ஜெ.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. அந்த வகையில் படத்தின் நீளம் பற்றியும் பலர் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில் மக்களின் விமர்சனங்களை ஏற்காவிதமாக படத்திலிருந்து 11 நிமிடம் 51 வினாடிகளை படக்குழு குறைத்துள்ளது.

படத்தின் நீளம் குறைக்கப்பட்ட நிலையில், மக்கள் மத்தியில் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஷங்கரின் பிரம்மாண்டத்தையும், உலகநாயகனின் நடிப்பையும் கண்டு ரசிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், படத்தின் இறுதியில் ‘இந்தியன்-3’ படத்தின் ட்ரைலர் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் ‘இந்தியன் 3’ படத்தை மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும், 2025ம் ஆண்டு “இந்தியன் 3” படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *