தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”.
இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
“மாமனிதன்” திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைந்திருப்பதால் பெண்கள் குடும்பம் சகிதமாக வந்து இப்படத்தை பார்க்க துவங்கியுள்ளனர். நேற்று மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளில் பெண்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது.
அனைவருக்குமான படமாக ”மாமனிதன்” வந்திருப்பதால், ஒருமுறையாவது இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
சமீப காலமாக வந்த படங்களில், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக ”மாமனிதன்” இருப்பதால், பெண்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வருகிறது.
இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டுள்ளார்.