ஐடி கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறார் ஏகன். அங்கு இன்டெண்டாக வருகிறார் ஃபெமினா. அலுவலகத்தில் கண்டிப்பாகவும், அலுவலகத்தின் வெளியே அமைதியான மனிதராகவும் இருக்கிறார் ஏகன். இந்நிலையில், ஒருநாள் ஃபெமினாவை அவர் தங்கி இருக்கும் பிஜியில் கொண்டு போய் விடுகிறார். அப்போது தன்னுடைய கல்லூரி நாட்கள் நினைவுக்கு வர 2000 பெண்கள் படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக சேருகிறார். அங்கு ஸ்ரீதேவியை காதலிக்கிறார். ஸ்ரீதேவியின் அப்பா ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவி ஏகனை பிரிந்து வீட்டில் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்கிறார்.
ஃபெமினா ஒருவரை காதலிக்கிறார். அவர் காதலில் இருக்கும் பிரச்சினையை பற்றி ஏகனிடம் கூறுகிறார். ஏகனும் தன்னுடைய காதலை பற்றி ஃபெமினாவிடம் கூறுகிறார்.
ஸ்ரீதேவி ஏன் ஏகனை திருமணம் செய்ய மறுத்தார்? ஃபெமினாவின் காதலில் இருக்கும் பிரச்சனை தீர்ந்ததா? ஏவிளுக்கும் ஃபெமினாவுக்கும் இடையில் இருப்பது என்ன உறவு? என்பதை படத்தின் மீதி கதை.
இன்றைய நவீன காலகட்டத்தில் மையப்படுத்திய காதலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சின்னசாமி. கல்லூரி காட்சிகளில் இந்த காலத்து இளைஞர்களின் நிலையை இன்னும் சற்று விரிவாகவே கூறி இருக்கலாம். ஆனாலும் ஒரு ஆண் பெண் இருவரும் காதலிப்பது ஒத்துவரவில்லை என்றால் அதை விட்டு விலகுவது தான் சரி என்று தெளிவாக முடிவு எடுப்பது, காதல் தோல்வியின் வருத்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் அது தனக்கான சரியான துணியை தேர்ந்தெடுப்பது என்று வேகமாக கடந்து வரும் இன்றைய நவீன உலகத்தை சிறப்பான திரைக்கதை மூலம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் பாராட்டுக்கள். அது மட்டுமல்ல, எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆகையால், அனைத்து பெண்களையும் ஒரே மாதிரியாக நினைப்பது தவறு. ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? ஆண் ஒரு பெண்ணை எவ்வாறு கையாள்கிறான்? எப்படி கையாள வேண்டும்? என்பதை எளிமையாக அதேசமயம் அழுத்தமாக தன்னுடைய கருத்தை திரைக்கதையின் மூலம் பதிவு செய்து இன்றைய நவீன இளைஞர்களின் உளவியலை அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
இன்றைய கால இளைஞர் எப்படி இருக்கிறார் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலம் திறமையாக வெளிக்காட்டி இருக்கிறார் ஏகன். முதல் படத்திலிருந்து தன்னுடைய தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்த அதிக சிரத்தை எடுத்திருக்கிறார் ஏகன் டப்பிங்-ல் மட்டும் இன்னும் சிறிது பயிற்சி எடுத்தால் தன்னை சிறந்த நடிகனாக உருவாக்க முடியும்.
ஸ்ரீதேவி தனக்கு கொடுத்த பாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார்.
ஃபெமினா தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக தன்னுடைய காதலையும், p ஒரு பெண்ணுடைய மனது ஆணிடம் என்ன எதிர்பார்க்கும் என்பதையும் அழுத்தமாக தன்னுடைய நடிப்பில் உணர்த்தியிருக்கிறார்.
இசை கதையுடன் பயணித்தாலும் உணர்வுபூர்வமான காட்சிகளில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல்களுக்கும் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இயக்குநர்: யுவராஜ் சின்னசாமி
நடிகர்கள் : ஏகன், ஸ்ரீ தேவி, ஃபெமினா ஜார்ஜ், மைம் கோபி, இந்துமதி மாணிக்கம்
இசை: சித்து குமார்
தயாரிப்பு : டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து
தயாரிப்பு நிறுவனம்: விஷன் சினிமா ஹவுஸ்
ஹைக்கூ – நவீன இளசுகளின் உளவியல் கவிதை.

