ஜிம் – மை உடனடியாக திறக்க வலுக்கிறது அரசுக்கு கோரிக்கை – தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசன்

ஜிம் – மை உடனடியாக திறக்க வலுக்கிறது அரசுக்கு கோரிக்கை- தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசன்.

கடந்த வருடம் கொரோனா காலத்தில் அதிக நாட்கள் மூடப்பட்டு இருந்தது எங்கள் தொழில்துறை தான் அதில் 600 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் தமிழகத்தில் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன தற்போதும் பல இடங்களில் அவ்வாறு சூழல் நிலவுகிறது இது இப்படியே தொடரும்மானால் இந்தத்துறையே முழுமையாக இல்லாமல் போய்விடும்.

நாங்கள் ஊரடங்கோ அல்லது அரசு மற்றும் சுகாதாரத்துறை கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறோம் ஆனால் அவை முழுமையான ஊரடங்காக இருக்க வேண்டும், மற்ற துறைகள் எல்லாம் செழிப்பாக செயல்பட உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும் இயங்கும் எங்களை வீட்டிற்குள் அடக்குவது ஏன்? மருத்துவத்திற்கு நிகரானது உடற்பயிற்சி கூடத்துறை என அவை தெறிந்தும் நீங்கள் கேளிக்கை விடுதி மற்றும் சுற்றுலா தளம்மான பொழுது போக்கு அம்சங்களுடன் எங்களை இணைத்து இழுத்து மூடுவது எதற்காக..

கடந்த வருடம் மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்த SOP மற்றும் பல வழிகாட்டுதல்களை பின்பற்றி தற்போது வரை ஜிம் களை நடத்தி வந்துள்ளோம், நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து உள்ளோமே தவிற கொரோனா தொற்று பரவும் இடம் இவை இல்லை, பொது வெளியில் இருந்து வருபவரை முழுமையாக பரிசோதனை செய்த பின்பே ஜிம் மிற்குள் அனுமதிக்கிறோம்.

உடனடியாக தமிழக அரசு எங்களது தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசனின் கோரிக்கையை பரிசீலனை செய்து நாங்கள் முழுமையாக கேட்கவில்லை அரசு வழிகாட்டுதலுடன் 50 சதவீத உறுப்பினர்களுடன் உடற்பயிற்சி கூடம் செயல்பட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

– v ராஜா ( தலைவர் ) I பிரசன்ன குமார் ( துணை தலைவர் ) A பஹத் ஜஹாங்கீர் ( செயலாளர் )
M விஜயராகவன்.
*தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *