நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோபிநாத் பேசுகையில், “சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகவே நாங்கள் இந்த படத்தை எடுத்துள்ளோம். படத்தின் இயக்குநர் விக்னேஸ்வரன் நான் மற்றும் சுந்தர் கப்பலில் பணியாற்றும் போதே சில குறும்படங்களை எடுத்தோம். அதை பார்த்தவர்கள் பாராட்டியதோடு, எங்கள் கான்சப்ட் மற்றும் மேக்கிங் குறித்தும் பாராட்டினார்கள். எனவே அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது விக்னேஸ்வரன் தன்னிடம் சினிமாவுக்கான இரண்டு கதை இருப்பதாக கூறினார். அதில் நாம் முதல் படமாக இந்த கடையை பண்ணலாம் என்று கூறி ‘ஃபாரின் சரக்கு’ கதையை சொன்னார். எனக்கு ரொம்ப பிடித்தது. சில விஷயங்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அப்போது சீனாவில் இருந்து சிங்கப்பூர் கப்பலில் செல்வதற்குள் கதையில் சில விஷயங்களை சேர்த்து சொன்னார். உடனே படத்தை தொடங்க முடிவு செய்தோம். அதன்படி கப்பலில் இருந்து வந்ததும் படத்தை தொடங்கினோம். பல போராட்டங்களை சந்தித்து இந்த படத்தை எடுத்திருந்தாலும் இறுதியில் படம் பார்த்த போது இயக்குநர் சொன்னதை விட படத்தை சிறப்பாக எடுத்துக்கொடுத்தார்.
படத்தொகுப்பாளர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், “இயக்குநர் விக்னேஷ்வரனுக்கும், தயாரிப்பாளர் கோபிநாத்துக்கும் முதலில் நன்றி. எனக்கு இப்படி ஒரு படம் முதல் படமாக அமைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ்வரைன் சிந்தனை மிக வித்தியாசமாக இருக்கிறது. அவருடன் பணியாற்றியதால் நான் நிறைய கற்றுக்கொண்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி வெளியாகிறது. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி பேசுகையில், “இந்த படம் ஆரம்பித்தது முதல், இந்த இடத்துக்கு வந்தது வரை அனைவரும் சொல்லிவிட்டார்கள். ஒரு சினிமா ரசிகனாக இருந்து சினிமாக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அதிகமாகி திறமை இருந்து அதை வெளிக்காட்ட முடியாத இடத்தில் இருந்து, என்னை போன்றவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான இடத்தில் நான் நிற்பதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒருத்தன் ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபடுகிறார், ஓடுகிறான் என்றால், அவனிடம் நீ நன்றாக ஓடுகிறார் என்று சொன்னால், அவன் நன்றாக ஓடுகிறானோ இல்லையோ அவனுக்கு மிகப்பெரிய தைரியம் கிடைக்கும். அதுபோல, பல புதுமுகங்களுக்கு தைரியம் கொத்து வரும் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் உள்ளிட்ட ஊடகத்தினருக்கு பெரிய நன்றி. கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு புடிக்கும்.
‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக் கொண்ட இப்படத்தின் எந்த ஒரு இடத்திலும் சிகரெட் புகைப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகள் இல்லாததால், மது மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு செய்யும் எச்சரிக்கை டைடில் கார்டு இல்லாத படமாக இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.