கொரோனாவிற்கு பிறகு பார்ட்டியை அறிவிக்கவிருக்கும் வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு இயக்கி ஜெய் நாயகனாக நடித்து வரும் ‘பார்ட்டி’ படத்திற்கு சில சிக்கல்கள் இருந்ததால் வெளியாக முடியாமல் இருந்தது. தற்போது அதற்கு இருந்த சிக்கல் தீர்ந்து படம் வெளியாக காத்திருக்கிறது.
ஜெய்யுடன் சாம், சிவா, சந்திரன், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு செய்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்த பிறகு ‘பார்ட்டி’ படத்தின் வெளியீட்டு தேதியை வெங்கட்பிரபு அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.