தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் மார்ச் 18ம் தேதி அன்று தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தவழும் குழந்தையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்த அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் நடந்து செல்லும் குழந்தையாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் ஓடும் குழந்தையாகும் என்றும் கூறி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் வேளாண் துறை குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும் என்று எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இச்செய்தியை ஆங்கில செய்தி இதழ்களில் முக்கிய நிறுவனமான ‘Deccan Chronicle’ நிறுவனம், அவர்களின் செய்திப் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.
அந்த செய்தியில் அவர்கள் ‘உழவன்’ என்பதற்குப் பதிலாக ‘உழகவன்’ என்றும். தமிழக வேளாண் அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களின் புகைப் படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் புகைப் படத்தை பதிவு செய்து, வாசிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களின் செய்தியை கீழுள்ள படத்தில் காணலாம்.