ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி, அணு கீர்த்தி வாஸ், புகழ், சிங்கம் புலி, இளவரசு, ஞானசம்பந்தம், தீபா மற்றும் பலர் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “டிஎஸ்பி”.
கதைப்படி,
திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்கடை வியாபாரிகளுக்கு தலைவராக இருக்கும் இளவரசுவின் மகன் தான் விஜய் சேதுபதி. மகன் வேலை இல்லாமல் இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், சென்றால் கவர்மெண்ட் வேளைக்கு தான் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர் இளவரசு.
அதே ஊரில், முட்டை வியாபாரம் செய்யும் “முட்டை” ரவி பெரிய ரவுடியாக இருக்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட உரசல் காரணமாக, 2 வருடம் தலைமறைவாக இருந்து “டிஸ்பி” ஆகிறார் விஜய் சேதுபதி. பின்பு என்ன? பழி வாங்க வேண்டியது தானே…
விஜய் சேதுபதி நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதே தோரணையும், மிரட்டலும் தான்.
ஹீரோயினாக வந்து செல்லும் அனுகீர்த்தி வாஸை, ஹீரோயின் என்று நம்புவதற்குள் படம் முடிந்து விட்டது.
ஏற்கனவே, கதைக்கும் திரைக்கதைக்கு சம்பந்தமில்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்க. எதற்குமே சம்பந்தம் இல்லாமல் என்ட்ரி கொடுக்கிறார் “நட்பு நாயகன்” விமல்.
அச்சம் என்பது மடமையடா படத்தில் குடும்பத்தையும், கிராம பின்னணியும் இருந்தால் படம் எப்படி இருந்திருக்குமோ. மொத்தத்தில் அப்படி ஒரு படமாக தான் இருக்கிறது “டிஎஸ்பி”.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு ஹிட்களை கொடுத்த பொன்ராம். அடுத்தடுத்து சீமராஜ, எம்.ஜி.ஆர். மகன் என அட்டர் பிளாப் படங்களை கொடுத்து அவரிடம் இருந்த சரக்கை தீர்த்துவிட்டார். அதே வரிசையில், டிஎஸ்பி-யும் இணைந்துள்ளது.
டி.இமான் இப்படத்திற்கு இசையை மாற்றியமைத்துள்ளார். ஆமாங்க, “மிருதன்” படத்திற்கு இவர் போட்ட டியூன அதே சைரன் சவுண்டோட லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்துட்டாரு.
டி.எஸ்.பி. – பதவியே வேணாம்.